ஹோம் /நியூஸ் /இந்தியா /

தென்னிந்திய மக்களுடன் என்றும் நான் இருக்கிறேன்- ராகுல் காந்தி

தென்னிந்திய மக்களுடன் என்றும் நான் இருக்கிறேன்- ராகுல் காந்தி

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

வயநாட்டில் போட்டியிடுவது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் அறிக்கை வெளியிட்ட பின்னர் விளக்கமளித்தார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

”தென்னிந்திய மக்களுடன் நான் இருக்கிறேன் என்பதை உணர்த்தவே கேரளாவில் உள்ள வயநாட்டில் போட்டியிடுகிறேன்” என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கமளித்துள்ளார்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய ராகுல் காந்தி, “தேர்தல் அறிக்கையை தயார் செய்யும் பணியை நாங்கள் ஓராண்டுக்கு முன்னரே தொடங்கிவிட்டோம். அப்போது ப. சிதம்பரம் மற்றும் கவுடாவைச் சந்தித்து நான் இரண்டு முக்கிய ஆலோசனைகளை மட்டும் வழங்கினேன்.

முதலாவதாக இந்தத் தேர்தல் அறிக்கை வெறும் நான்கு சுவருக்குள் தயாரிக்கப்பட்டதாக இருக்கவே கூடாது என்றேன். காரணம், தேர்தல் அறிக்கை என்பது இந்திய மக்களின் தேவைகளை, விருப்பங்களை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும். இரண்டாவதாக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகள் அனைத்தும் உண்மையானதாக இருக்க வேண்டும்.

ஏற்கனவே பிரதமர் மோடியிடமிருந்து நாம் அதிகப்படியான பொய் வாக்குறுதிகளைக் கேட்டுவிட்டோம். அதனால், காங்கிரஸ் வாக்குறுதியில் ஒன்று கூட பொய்யானதாக இருக்கக்கூடாது என்பதையும் அறிவுறுத்தினேன்.

ஒரு காலத்தில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை கேலி செய்து விமர்சித்துள்ளார். அது வீண் திட்டம் என்றும் தேவையில்லாத செலவு என்றும் விமர்சித்தார். ஆனால், இன்று அந்தத் திட்டம் நாட்டுக்கு எவ்வளவு நலன் செய்துள்ளது என அனைவருக்குமே தெரியும். அதனால்தான், 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை 150 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் கொண்டுவருவதாக வாக்குறுதி அளித்துள்ளோம்” என்றார்.

மேலும் பார்க்க: அமேதி, வயநாடு என 2 தொகுதிகளில் ராகுல் போட்டி!


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


ஐபிஎல் தகவல்கள்:

Published by:Rahini M
First published:

Tags: Congress President Rahul Gandhi, Elections 2019, Lok Sabha Elections 2019, Wayanad S11p04