காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நிதி ஆயோக் கலைக்கப்படும்: ராகுல் காந்தி உறுதி

புதிய நிதி அயோக் குழுவில் உறுப்பினர்களாக பிரபல நிபுணர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் இருப்பார்கள் என்றும் நூறுக்கும் குறைவான பணியாளர்கள் பணியாற்றுவார்கள் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Web Desk | news18
Updated: March 30, 2019, 8:33 AM IST
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நிதி ஆயோக் கலைக்கப்படும்: ராகுல் காந்தி உறுதி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
Web Desk | news18
Updated: March 30, 2019, 8:33 AM IST
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், நிதி ஆயோக் அமைப்பை கலைத்துவிட்டு, புதிய திட்டக்குழு அமைப்போம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சி பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறது. ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் 72,000 ரூபாய் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவில், தற்போது உள்ள நிதி ஆயோக் அமைப்பு, பிரதமருக்கு விளம்பரம் தேடித் தருவதையும், தரவுகளை மாற்றிக்கொடுப்பதையுமே செய்து வருவதாக பதிவிட்டுள்ளார்.
Loading...


இதனால் எந்தப் பயனும் இல்லாததால், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், இதனை கலைக்க உள்ளதாக ராகுல் காந்தி அறிவித்துள்ளார். இதற்கு பதிலாக, புதிய திட்டக்குழு அமைக்கப்படும் என்றும், அதில் உறுப்பினர்களாக பிரபல நிபுணர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் இருப்பார்கள் என்றும், நூறுக்கும் குறைவான பணியாளர்கள் பணியாற்றுவார்கள் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Also see... வேட்பாளரையே தூங்க வைத்த பிரபலத்தின் பேச்சு!
First published: March 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...