ரஃபேல் ஊழலில் விசாரணையும் உறுதி... சவுகிதாருக்கு சிறையும் உறுதி...! ராகுல் காந்தி உத்தரவாதம்

ராகுல் காந்தி. (PTI Photo)

"காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரஃபேல் ஒப்பந்த ஊழல் மீது விசாரணை நடக்கும். சவுகிதார் தேர்தலுக்குப் பின் சிறையில் இருப்பார்".

  • News18
  • Last Updated :
  • Share this:
”ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் இருந்தது என்பது மறைந்த முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பரிக்கருக்குத் தெரியும்” என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாக்பூரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசினார்.

ராகுல் காந்தி பேசுகையில், “உங்களிடன் நான் உறுதியாக சொல்கிறேன். நிச்சயமாக காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரஃபேல் ஒப்பந்த ஊழல் மீது விசாரணை நடக்கும்.

சவுகிதார் தேர்தலுக்குப் பின் சிறையில் இருப்பார். ரஃபேல் ஒப்பந்தத்தில் உண்மையான ஒப்பந்தத்தை மீறி 1600 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தத்தை மாற்றியதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறுகிறது.

திருடியதே அந்த ‘சவுகிதார்’ என்னும் காவலாளிதான். இதுகுறித்து முன்னொரு சமயம் அன்றைய பாதுகாப்புத்துறை அமைச்சர் மறைந்த மனோகர் பரிக்கர் தனக்கு இந்த ஒப்பந்தம் குறித்து எதுவும் தெரியாது என்றும் எதுவானாலும் நேரடியாகப் பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்றும் ஊடகங்களிடமே கூறியுள்ளார். ஊழல் நடந்தது என்பது அவருக்குத் தெரியும்” என்றார்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.மேலும் பார்க்க: மோடி ஆட்சி அல்ல மோசடி ஆட்சி - உதயநிதி விமர்சனம்
Published by:Rahini M
First published: