இளைஞர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி அசத்திய ராகுல் காந்தி! வைரல் வீடியோ

இளைஞர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி அசத்திய ராகுல் காந்தி! வைரல் வீடியோ
ராகுல் காந்தி
  • News18
  • Last Updated: October 18, 2019, 9:46 PM IST
  • Share this:
ஹரியானா மாநிலத்தில் கல்லூரி இளைஞர்களுடன் சேர்ந்து ராகுல் காந்தி கிரிக்கெட் விளையாடியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

மஹாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் அக்டோபர் 21-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு காங்கிரஸ் மற்றும் பா.ஜ.கவினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஹரியானா மாநிலத்திலுள்ள மகேந்திராகர் பகுதியில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டார்.

தேர்தல் பிரச்சாரம் முடிந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் டெல்லிக்குப் புறப்பட்டார். அப்போது மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் கே.எல்.பி கல்லூரியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அப்போது, அந்தக் கல்லூரி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களுடன் சேர்ந்து ராகுல் காந்தி கிரிக்கெட் விளையாடினார். ராகுல் காந்தி உற்சாகமாக பந்துகளை எதிர்கொண்டார். அவர், கிரிக்கெட் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.



Also see:

First published: October 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading