ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஓம்காரேஸ்வரர் கோயில் ஆரத்தி எடுத்து ராகுல் வழிபாடு... பிரியங்கா காந்தி குடும்பதோடு வருகை!

ஓம்காரேஸ்வரர் கோயில் ஆரத்தி எடுத்து ராகுல் வழிபாடு... பிரியங்கா காந்தி குடும்பதோடு வருகை!

ராகுல் காந்தி ஆரத்தி வழிபாடு

ராகுல் காந்தி ஆரத்தி வழிபாடு

ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ யாத்திரையின் போது ஓம்காரேஸ்வரர் கோயிலில் வழிபட்டு நர்மதை நதிக்கு ஆரத்தி எடுத்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madhya Pradesh, India

இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் ராகுல்காந்தி நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைப்பயணம் தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கியது. பின்னர் கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ராகுல்காந்தி நடைப்பயணத்தைத் தொடர்ந்தார். இந்த யாத்திரை தற்போது மத்தியப் பிரதேச மாநிலத்தில் தொடங்கியுள்ளது.

அதன்படி, மத்தியப் பிரதேசத்தின் கன்ட்வா மாவட்டத்திற்கு சென்ற ராகுல் காந்தி, அங்குள்ள புகழ்பெற்ற ஓம்காரேஸ்வரர் கோயில் வழிபாடு நடத்தினார். இது 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாகும். இந்த வழிபாட்டில் ராகுல் காந்தியின் சகோதரியும் அக்கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வதேரா, இவர்களின் மகன் ரெஹான் ஆகியோரும் கலந்து கொண்டனர். மாநில முன்னாள் முதலமைச்சர் கமல்நாத்தும் உடன் இருந்தார்.

கோயிலில் பாரம்பரிய முறைப்படி தலைப்பாகை கட்டி, காவி துணி அணிந்து வழிபட்டார் ராகுல் காந்தி. மேலும், அங்கு நர்மதா நதி ஓடும் நிலையில், பிரம்மபுரி கரையில் நின்று நர்மதா நதிக்கு ஆரத்தி எடுத்து வழிபட்டார். இந்த நிகழ்வின்போது கோயில் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ராகுல் காந்தியின் யாத்திரை 79வது நாளை கடந்து சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்த யாத்திரைக்கு காங்கிரஸ் தொண்டர்கள், பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. பாதயாத்திரை சென்ற ராகுல்காந்தியுடன் மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் ஏராளமான தொண்டர்கள் பயணித்தனர்.

First published:

Tags: Madhya pradesh, Priyanka gandhi, Rahul gandhi