ஆன்லைன் வகுப்பு கல்வியில் சமத்துவமின்மையை அதிகப்படுத்தும்: பினராயி விஜயனுக்கு ராகுல் காந்தி கடிதம்

ஆன்லைன் வகுப்பு கல்வியில் சமத்துவமின்மையை ஏற்படுத்தும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

ஆன்லைன் வகுப்பு கல்வியில் சமத்துவமின்மையை அதிகப்படுத்தும்: பினராயி விஜயனுக்கு ராகுல் காந்தி கடிதம்
பினராயி விஜயன், ராகுல் காந்தி.
  • Share this:
கேரளா வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு இணையவழி வகுப்பு தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார்.

கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த தேவிகா எனும் 10ம் வகுப்பு மாணவி, இணையவழி வகுப்பில் கலந்துகொள்ள இயலாததன் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலால் கடந்த திங்கள்கிழமை அன்று தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டார். ஏழை மாணவர்களுக்கு இணையவழி வகுப்பு என்பது பெரும் சுமை என்றும் அதை உடனே நிறுத்த வேண்டும் என்றும் மாணவர் அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்நிலையில், முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் வயநாடு மாவட்ட ஆட்சியர் ஆதிலா அப்துல்லாவுக்கும் நேற்று ராகுல் காந்தி எழுதியுள்ள கடிதத்தில், ’ஃபர்ஸ்ட் பெல்’ எனும் இணையவழி வகுப்பு ஒரு புதுவிதமான முயற்சி என்று கூறிய அவர், தற்காலிகமான ஒரு மாற்று வழிமுறை இது. கணினி, ஸ்மார்ட் ஃபோன், தொலைக்காட்சி, இணைய சேவை போன்ற டிஜிட்டல் வசதிகளை உறுதிபடுத்துவதைப் பொருத்து இதன் வெற்றி அமையும் என்றார்.


தனது தொகுதியில் பெருமளவிலான பழங்குடி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புக்குத் தேவையான இணைய வசதி இல்லை என்று குறிப்பிட்ட அவர், கல்வியாண்டு தொடங்கும்போது அவர்களுக்கு இந்நிலை பாதகமாக அமையும் என்றும் தெரிவித்தார். மேலும் கூறுகையில், பள்ளி செல்வதை இடைநிறுத்துவது அதிகமாக உள்ள தம் தொகுதியில் இந்த வழிமுறை கல்வியில் மேலும் சமத்துவமின்மையை உண்டாக்கக்கூடும் என்றார். பழங்குடி மாணவர்களுக்குத் தேவையான வசதிகள் செய்துத்தர வேண்டும் என்றும் அதற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சியில் அரசாங்கத்துடன் இணைந்து தானும் பணியாற்றவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Also see:
First published: June 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading