Home /News /national /

ராகுல் காந்தி ராஜினாமாவை ஏற்க மறுத்த சோனியா காந்தி?

ராகுல் காந்தி ராஜினாமாவை ஏற்க மறுத்த சோனியா காந்தி?

ராகுல் காந்தி - சோனியா காந்தி

ராகுல் காந்தி - சோனியா காந்தி

தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியை ராஜினாமா செய்வீர்களா என்ற கேள்விக்கு செயற்குழு கூடி முடிவெடுக்கும் என்று ராகுல் காந்தி பதிலளித்தார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ய முடிவு எடுத்ததாகவும், அதனை ஏற்க காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மறுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல்  7 கட்டங்களாக நடைபெற்றது. மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. ஆரம்பம் முதலே பா.ஜ.க 357 தொகுதிகளிக்கும் அதிகமான இடங்களில் தொடர்ந்து முன்னிலை வகித்தது.

பா.ஜ.க தனிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. காங்கிரஸ் கட்சி 50 தொகுதிகளில் மட்டுமே இதுவரை முன்னிலையில் உள்ளது.

கேரளா வயநாடு தொகுதியில் பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். அதே சமயம் அமேதி தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் ஸ்மிருதி ராணியை எதிர்த்து போட்டியிட்ட ராகுல் காந்தி பெரும் வாக்குகள் வித்தியாசத்தில்  பின் தங்கி உள்ளார்.

ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில் அவர் மீது கடும் விமர்சனம் எழுந்தது.

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, “மோடி மீண்டும் பிரதமராக வேண்டுமென மக்கள் முடிவெடுத்துள்ளனர். அவர்களின் முடிவை நான் மதிக்கிறேன்“ என கூறினார். மேலும் தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியை ராஜினாமா செய்வீர்களா என்ற கேள்விக்கு செயற்குழு கூடி முடிவெடுக்கும் என்று பதிலளித்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்யலாம் என்ற ராகுல் காந்தியின் முடிவை சோனியா காந்தி நிரகாரித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் காங்கிரஸ் செயற்குழு விரைவில் கூடி அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Published by:Vijay R
First published:

Tags: Amethi S24p37, Lok Sabha Election 2019, Rahul gandhi, Sonia Gandhi, Wayanad S11p04

அடுத்த செய்தி