ராஜினாமா முடிவில் இருந்து பின்வாங்காத ராகுல் காந்தி?

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று 6 மாநில காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜினாமா முடிவில் இருந்து பின்வாங்காத ராகுல் காந்தி?
ராகுல் காந்தி
  • News18
  • Last Updated: May 28, 2019, 2:53 PM IST
  • Share this:
காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவில் ராகுல் காந்தி உறுதியாக இருப்பதால், இந்த வாரத்தில் மீண்டும் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறும் என கூறப்படுகிறது.

மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பின் நடைபெற்ற காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டத்தில், அந்த கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார். ஆனால், ராகுலின் ராஜினாமாவை நிராகரித்த உறுப்பினர்கள், கட்சியில் மாற்றங்கள் கொண்டுவர ராகுலுக்கு முழு சுதந்திரம் வழங்குவதாக தீர்மானம் நிறைவேற்றினர்.

இதனிடையே, தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று 6 மாநில காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இந்த சூழலில், ராகுல் தனது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை என கூறப்படுகிறது.


தனது இடத்தை நிரப்பக் கூடிய தலைவர் யார் எனக் கூறுமாறு பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், பொருளாளர் அகமது படேலிடம் ராகுல் காந்தி கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், இதனை மறுத்துள்ள அவர்கள் அன்றாட கட்சிப் பணிகள் குறித்து பேசவே ராகுலை சந்தித்ததாக தெரிவித்துள்ளனர். ராகுல் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாவிட்டால், மீண்டும் இந்த வாரத்தில் காரிய கமிட்டி கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

Also see... காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல்காந்தி விலகுவதாக தகவல்?
Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்