காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் உட்கட்சி மோதல்களை ராகுல் காந்தி இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான விரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட மிகப் பெரும் தோல்விக்குப் பொறுப்பேற்று, கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இருப்பினும், அவருடைய முடிவை காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி ஏற்கவில்லை.
இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியின் பிரச்னைகள் குறித்து பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி, ‘அகில இந்திய காங்கிரஸின் பொறுப்பாளர்கள். மோசமாக செயல்பட்ட காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்கள்தான் தோல்விக்கு பொறுப்பானவர்கள். காங்கிரஸ் தலைவர் அல்ல. ராகுல் காந்தி, பதவி விலகவில்லை. அவர், காங்கிரஸ் கட்சியின் தலைவராக தொடர்வார்.
தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று அவர் ராஜினாமா செய்வதாகக் கூறினார். அந்த முடிவை, காங்கிரஸ் காரியக் கமிட்டி ஒரு மனதாக அவரைத் தொடர்ந்து தலைவராக இருக்க வேண்டும் என்று கூறியது. 2017-ம் ஆண்டின் இறுதியில்தான் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற ஒன்றரை ஆண்டுகளில் அவர் தேர்தலை எதிர்கொண்டுள்ளார்.
அவருடைய திறமையை நிரூபிக்க மேலும் அவகாசம் கொடுக்கவேண்டும். எங்கள் கட்சிக்கு முழு அறுவைசிகிச்சைத் தேவை. கட்சியின் எல்லா மட்டத்திலும் தேர்தல் வைத்து நிர்வாகிகள் நியமிக்கப்படவேண்டும். அதன்மூலம், உலகுக்கும் நாட்டுக்கும் எங்களிடம் இளம் ரத்தம் உள்ளது என்பதை நிரூபிக்கவேண்டும்.
ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சரியான மக்கள் தலைமையை நியமனம் செய்யவேண்டும். கட்சியின் எல்லா மட்டங்களிலும் தேர்தல் நடத்துவதன் மூலம், காங்கிரஸ் கட்சியை ராகுல் காந்தி, மொத்தமாக மறுசீரமைப்பு செய்யவேண்டும். கட்சிக்குள் நடைபெறும் மோதல்களை ராகுல் காந்தி இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவேண்டும்’ என்று தெரிவித்தார்.
Also see:
Published by:Karthick S
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.