தேர்தலுக்கு முந்தைய கூட்டணி உறுதி: மம்தா பானர்ஜி

மக்களவை தேர்தலுக்கு முன்பு முதற்கட்டமாக 15 கட்சிகள் ஒன்றிணைந்தது மோடிக்கு எதிரான வலுவான கூட்டணியின் அச்சாரமாக இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

தேர்தலுக்கு முந்தைய கூட்டணி உறுதி: மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி
  • News18
  • Last Updated: February 14, 2019, 8:00 AM IST
  • Share this:
குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கி தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை அமைக்க உள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இந்த கூட்டணியில் முதற்கட்டமாக 15 கட்சிகள் இணைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகி வரும் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்த வியூகம் வகுத்து வருகிறது. அந்த வகையில், சர்வாதிகாரத்தை அகற்றுவோம், ஜனநாயகத்தை காப்போம் என்ற தலைப்பில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, தேசியவாத காங். தலைவர் சரத்பவார், காங்கிரஸ் எம்.பி. ஆனந்த் சர்மா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 22 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.


அரவிந்த் கெஜ்ரிவால், Arvind kejriwal,
அரவிந்த் கெஜ்ரிவால்


இதைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இல்லத்தில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ராகுல் காந்தி, முதலமைச்சர்கள் மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, அரவிந்த் கெஜ்ரிவால், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட 15 கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பாஜகவுக்கு எதிராக மாநில கட்சிகளை பலப்படுத்துவது, 15 நாட்களுக்கு ஒருமுறை எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி வியூகம் வகுப்பது, மாநிலங்கள்தோறும் பொதுக்கூட்டங்களை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டன.

ராகுல் காந்தி | rahul-gandhi
ராகுல் காந்தி
சுமார் ஒரு மணிநேரமாக நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி இந்திய அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தும் பா.ஜ.கவுக்கு எதிராக போராடுவது என்ற பிரதான இலக்குடன் அனைவரும் இணைந்து செயல்பட உள்ளதாக தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி, குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கி தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை அமைக்க உள்ளதாக தெரிவித்தார். மக்களவைத் தேர்தலுக்கு முன்பு முதற்கட்டமாக 15 கட்சிகள் ஒன்றிணைந்தது மோடிக்கு எதிரான வலுவான கூட்டணியின் அச்சாரமாக இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

Also see... பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் கடைசி நாடளுமன்றக் கூட்டத்தொடர்
First published: February 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்