ராகுல் காந்தி மீது தடியடி? நெஞ்சைப் பிடித்த தள்ளிய காவல்துறை - உ.பியில் பெரும் பரபரப்பு

ராகுல் காந்தி

உத்தரப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தை பார்க்கச் சென்ற ராகுல் காந்தியை தடுத்து நிறுத்தும் போது காவல்துறை தடியடி நடத்தியதாக கூறியுள்ளார். அதனால், பரபரப்பு ஏற்பட்டது.

 • Share this:
  உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள சண்ட்பா பகுதியில் வயலில் தாயுடன் வேலை செய்து கொண்டிருந்த 19 வயது இளம்பெண்ணை 4 இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கடுமையாக தூக்கி வீசினர். மருத்துவமனையில் 15 நாட்கள் போராட்டத்துக்குப் பிறகு இளம்பெண் உயிரிழந்த நிலையில், இறுதி மரியாதைக்கு அவகாசம் அளிக்காமல், சடலத்தை போலீஸார் எடுத்துச் சென்று நள்ளிரவில் தகனம் செய்தனர். இந்த சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

  இந்தநிலையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேரில் சென்றார்.

  கீழே விழுந்த ராகுல் காந்தி


  அவர், யமுனா விரைவுச் சாலையில் நடந்து சென்றபோது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார். காவல்துறை எதிர்ப்பையும் மீறி சென்றபோது காவல்துறை அதிகாரி ராகுல் காந்தியின் நெஞ்சின் மீது கைவைத்து தள்ளிவிட்டார்.

  ராகுல் காந்தி


  மேலும், அங்கு கூடியிருந்தவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


  இதுகுறித்து தெரிவித்த ராகுல் காந்தி, ‘காவல்துறையினர் என்னை தள்ளிவிட்டனர். என்னை லத்தியால் தாக்கினர். என்னை மைதானத்துக்கு தூக்கிச் சென்றனர். இந்த நாட்டில் மோடி மட்டும்தான் நடந்துசெல்லவேண்டுமா? சாதரண மனிதன் நடந்துசெல்லக்கூடாதா? எங்களுடைய வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது. அதனால், நாங்கள் நடந்து செல்ல தொடங்கினோம்’ என்று தெரிவித்தார்.

  பின்னர், விதிகளை மீறியதாக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை காவல்துறையினர் கைது செய்தனர்.
  Published by:Karthick S
  First published: