பரபரப்பான அரசியல் சூழலில் ராகுல் காந்தி இன்று புதுச்சேரி வருகை

பரபரப்பான அரசியல் சூழலில் ராகுல் காந்தி இன்று புதுச்சேரி வருகை

ராகுல் காந்தி

முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதிக்கு சென்று அங்குள்ள தென்னந்தோப்பில் மீனவ பெண்களுடன் கலந்துரையாடுகிறார் ராகுல் காந்தி.

 • Share this:
  டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் ராகுல் காந்தி அங்கிருந்து சிறிப்பு விமானம் மூலம் புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்திற்கு செல்கிறார்.

  இன்று காலை 10:40 மணிக்கு புதுச்சேரி வரும் ராகுல் காந்தியை முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், காங்கிரஸ் பிரமுகர்கள் விமான நிலையத்தில் வரவேற்கின்றனர். அங்கிருந்து கார் மூலம் முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதிக்கு சென்று அங்குள்ள தென்னந்தோப்பில் மீனவ பெண்களுடன் கலந்துரையாடுகிறார்.

  சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெறும் இந்த கலந்துரையாடலை தொடர்ந்து, கார் மூலம் மதியம் 1.30 மணியவில் கம்பன் கலை அரங்கில் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார்.

  பிற்பகல் 3 மணிக்கு தனியார் ஹேட்டலுக்கு செல்லும் அவர், அங்கு மதிய உணவுவிற்குப் பின்னர் ஓய்வு எடுக்கிறார்.

  பின்னர், மாலை 4 மணியளவில் ஏஎப்டிமில் மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். சுமார் ஒன்றரை மணி நேரம் அவர் இந்த பொது கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

  மாலை 5.45 மணி விமானம் நிலையம் வரும் ராகுல் காந்தி சிறப்பு விமானம் மூலம் புறப்பட இருக்கிறார்.

  Must Read : புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து கிரண் பேடி விடுவிப்பு... தமிழிசை சௌந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு

   

  புதுச்சேரியில் 4 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர்.  அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண் பேடி விடுவிக்கப்பட்டுள்னார். இத்தகைய  பரபரப்பான அரசியல் சூழலில், ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகின்றது.
  Published by:Suresh V
  First published: