சாலையில் அமர்ந்து புலம்பெயர் தொழிலாளர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார் ராகுல் காந்தி..!

எங்கள் கிராமத்துக்கு செல்வதற்கான வாகனங்களை ஏற்பாடு செய்து தருவதாக கூறியுள்ளார்” என்று அத்தொழிலாளர்கள் தெரிவித்ததாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

சாலையில் அமர்ந்து புலம்பெயர் தொழிலாளர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார் ராகுல் காந்தி..!
ராகுல் காந்தி
  • Share this:
ஊரடங்கு காரணமாக வேலைவாய்ப்புகளை இழந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்கின்றனர். ஹரியானாவிலிருந்து சில புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மத்தியப்பிரதேசத்தை நோக்கி நடந்து செல்லும்போது, அவர்களை டெல்லியின் சுக்தேவ் விஹார் மேம்பாலம் பகுதி அருகே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்துள்ளார்.

பிளாட்பாரத்தில் அமர்ந்திருந்த மக்களிடம் மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றியவாறு ராகுல் அமர்ந்து பேசியுள்ளார். தொழிலாளர்களுக்குத் தேவையான மாஸ்க், உணவு மற்றும் தண்ணீர் வழங்கியுள்ளார். சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டும் ஏன் நடந்து செல்கிறீர்கள் எனக் கேட்டுள்ளார். சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தருவதாக தொழிலாளர்களிடம் உறுதியளித்துள்ளார்.

”ராகுல் காந்தி எங்களிடம் வந்து பேசி, நாங்கள் அனுபவிக்கும் சிரமங்களையும் இடர்ப்பாடுகளையும் குறித்து அறிந்துகொள்ள விரும்பினார். நாங்கள் இங்கு பட்டினியால் செத்துக்கொண்டிருக்கிறோம். எங்களுக்கு இங்கு எந்த வேலையும் இல்லை. 50 நாள்களாக இப்படித்தான் இருக்கிறோம். எங்களிடம் இருக்கும் பணமெல்லாம் சாப்பாட்டுக்கே செலவாகிவிட்டது. ராகுல் காந்தி வந்து எங்களிடம் குறைகளைக் கேட்டார்.

எங்கள் கிராமத்துக்கு செல்வதற்கான வாகனங்களை ஏற்பாடு செய்து தருவதாக கூறியுள்ளார்” என்று அத்தொழிலாளர்கள் தெரிவித்ததாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
First published: May 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading