காயம்பட்ட புகைப்படக் கலைஞர்! ஓடிவந்து உதவிய ராகுல் காந்தி

சுமார் 11 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் ராகுல் காந்தி கல்பெட்டா பகுதிக்கு வந்தடைந்தார்.

news18
Updated: April 4, 2019, 4:07 PM IST
காயம்பட்ட புகைப்படக் கலைஞர்! ஓடிவந்து உதவிய ராகுல் காந்தி
ராகுல் காந்தி
news18
Updated: April 4, 2019, 4:07 PM IST
கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல் காந்தி பேரணியாக சென்றபோது, ஏற்பட்ட கூட்டநெரிசலில் காயமடைந்த புகைப்படக் கலைஞரை ஆம்புலன்ஸில் ஏற்ற ராகுல் காந்தி உதவிசெய்தார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இன்று வேட்புமனு தாக்கல் செய்யவதற்கு ராகுல் காந்தி வயநாடு சென்றார். சுமார் 11 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் ராகுல் காந்தி கல்பெட்டா பகுதிக்கு வந்தடைந்தார்.

அங்கிருந்து திறந்த வாகனத்தில் ராகுல் காந்தி பேரணியாகச் சென்றார். அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டிருந்து வரவேற்பு அளித்தனர். அப்போது, வாகனங்கள் நிறுத்தியிருந்த பகுதியில் தடுப்புகள் சரிந்து விழுந்தன. அதில் 3 செய்தியாளர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது. அதில் புகைப்படக் கலைஞர் ஒருவர் கடுமையாக காயமடைந்தார்.

காயமடைந்தவரை, ஆம்புலன்ஸ் வந்து உடனே மீட்டுச் சென்றது. அவரை, ஆம்புலன்ஸில் ஏற்றுவதற்கு ராகுல் காந்தி உதவி செய்தார். காயம்பட்ட நபரை ஸ்டெரச்சரில் தூக்கிச் சென்று, ஆம்புலன்ஸில் ஏற்றும் வரை ராகுல் காந்தியும் கூடவே சென்று காயம்பட்டவரை ஆம்புலன்ஸில் ஏற்றிவிட்டார். அப்போது எடுக்கப்பட்ட ராகுல் காந்தியின் புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.ஐ.பி.எல் விவரம்


Also see:

First published: April 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்