ஹோம் /நியூஸ் /இந்தியா /

'விவசாயிகளுக்காக ஒரு மணிநேரம் அல்ல 5000 மணிநேரம் கூட காத்திருப்பேன்' - ராகுல்காந்தி

'விவசாயிகளுக்காக ஒரு மணிநேரம் அல்ல 5000 மணிநேரம் கூட காத்திருப்பேன்' - ராகுல்காந்தி

ராகுல்காந்தி

ராகுல்காந்தி

வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் பேரணியில் பங்கேற்றவர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  விவசாயிகளுக்காக ஒரு மணிநேரம் அல்ல ஐந்தாயிரம் மணிநேரம் கூட காத்திருப்பேன் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

  வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் 3 நாட்கள் டிராக்டர் பேரணி நடைபெற்றது. ராகுல்காந்தி தலைமையில் நடைபெற்ற பேரணி பஞ்சாப்பில் இருந்து ஹரியானா செல்ல முற்பட்ட போது, அம்மாநில எல்லையில் காவல்துறையினர் டிராக்டர் பேரணியை தடுத்து நிறுத்தினர்.

  பின்னர் சிறிது நேரம் கழித்து காவல்துறையினர் அனுமதி அளித்தனர். இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, ஹரியானா மாநில எல்லையில் காத்திருப்பது தனதுக்கு மகிழ்ச்சியே என்றும், 5000 மணிநேரம் கூட காத்திருக்க தயார் என்றும் கூறினார்.

  Also read... ஃபேஸ்புக் பகுப்பாய்வில் பிரதமர் மோடியை விட ராகுல்காந்தியின் பக்கத்தில் ஈடுபாடு (Engagements) 40% அதிகரிப்பு.. ஹிந்துஸ்தான் டைம்ஸ் தகவல்..

  வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் பேரணியில் பங்கேற்றவர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Rahul gandhi