ஹோம் /நியூஸ் /இந்தியா /

'இந்தியை தேசிய மொழியாக்குவீர்களா?’ - பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல்காந்தி சொன்ன பளிச் பதில்!

'இந்தியை தேசிய மொழியாக்குவீர்களா?’ - பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல்காந்தி சொன்ன பளிச் பதில்!

பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தி

பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தி

ராகுல் காந்தி இந்தியை மட்டும் தேசிய மொழியாக மாற்றுவதாக எந்தவித எண்ணமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Karnataka, India

  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் இந்தி மொழியைப் பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு, இந்தியை மட்டும் தேசிய மொழியாக மாற்றுவதாக எந்தவித எண்ணமும் இல்லை என்று தெரிவித்தாக கட்சியில் மூத்த உறுப்பினர் பிரியங்க் கார்கே தகவல் தெரிவித்துள்ளார்.

  கர்நாடகாவில் வெள்ளிக்கிழமை அன்று பாரத் ஜோடோ யாத்திரையில் ஈட்டுப்பட்டு இருக்கும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் பல கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். அதில் இந்தி மொழி பற்றிய கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு அவர் இந்தியை மட்டும் தேசிய மொழியாக மாற்றுவதாக எண்ணம் இல்லை என்றும் மற்றும் அதே போல் மாநில மொழிகளின் அடையாளத்தை அச்சுறுத்தும் எண்ணமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளதாகக் கட்சியில் மூத்த உறுப்பினர் பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார்.

  Also Read : புரட்டாசி சனிக்கிழமை: திருப்பதியில் லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்... தரிசனத்திற்கு 48 மணிநேரம் காத்திருப்பு!

  பிரியங்க் கார்கே, பாரத் ஜோடோ யாத்திரையின் செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தியுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல் பற்றித் தெரிவித்துள்ளார். அதில் ராகுல் காந்தியிடம் கன்னட மொழியின் அடையாளம் பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு அவர், எல்லா தாய்மொழிகளும் முக்கியமானவை. நாங்கள் அனைத்து மொழிகளையும் மதிக்கிறோம் என்றும் அனைவருக்கும் சட்டப்படி உரிமை உள்ளது என்றும் கூறினார் என்று தெரிவித்துள்ளார்.

  தொடர்ந்து பேசிய அவர், கலந்துரையாடலில் கலந்துகொண்டவர்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் இல்லை. அவர்கள் சட்டத்தைக் காக்க யாத்திரையில் இணைந்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

  Published by:Janvi
  First published:

  Tags: Hindi, Karnataka, Rahul gandhi