#ModiSpeaksToNews18 : ராகுல் காந்தி அமேதியை விட்டு வெளியேறும் சூழல் உருவாகியிருக்கிறது - பிரதமர் மோடி

யார் வேண்டுமானாலும் இரு மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட அரசியலமைப்பு அனுமதிக்கிறது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்

#ModiSpeaksToNews18 : ராகுல் காந்தி அமேதியை விட்டு வெளியேறும் சூழல் உருவாகியிருக்கிறது - பிரதமர் மோடி
மோடி நேர்காணல்
  • News18
  • Last Updated: April 10, 2019, 12:39 PM IST
  • Share this:
ராகுல் காந்தி அமேதியை விட்டு வெளியேறும் சூழல் உருவாகியிருப்பதுதான் உண்மையான பிரச்னை என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி அளித்த சிறப்பு பேட்டியில், புல்வாமா தாக்குதல், மக்களவை தேர்தல், காஷ்மீர் பிரச்னை, ரஃபேல் விவகாரம், 1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரம், நம்பி நாராயணன், சக்ஜுதா எக்ஸ்பிரஸ், ரெயில் குண்டு வெடிப்பு ஆகிய பல விவகாரங்களில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

ராகுல்காந்தி இரு தொகுதிகளில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மோடி, ‘யார் வேண்டுமானாலும் இரு மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட அரசியலமைப்பு அனுமதிக்கிறது. அதில் தவறேதும் இல்லை. ஆனால் ராகுல் காந்தி அமேதியை விட்டு வெளியேறும் சூழல் உருவாகியிருப்பதுதான் உண்மையான பிரச்னை. அவர் தமது குடும்ப பாரம்பரியத்திலிருந்து பெற்ற தொகுதியை விட்டு ஓடுவதுதான் விவாதிக்கப்பட வேண்டியது’ என்று கூறியுள்ளார்


உத்தரபிரதேசத்தைப் பொறுத்தவரையிலும் பிரியங்கா ஏற்படுத்தப்போகும் விளைவுகளுக்கு என்ன முக்கியத்துவம் அளிக்கிறீர்கள், காங்கிரசின் இந்த நடவடிக்கையால் அக்கட்சிக்கு கிடைக்கப்போகும் பிரதிபலனில் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்ற கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மோடி, ‘என்னைப்பொறுத்தவரையிலும் ஒரு குறிப்பிட்ட நபரைப் பற்றி பேசுவது தவறு என நான் கருதுகிறேன்' என்று கூறியுள்ளார்.

Also watch

First published: April 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்