ஹோம் /நியூஸ் /இந்தியா /

தன்னை தானே சாட்டையால் அடித்துகொண்ட ராகுல் காந்தி.... காரணம் இதுதானா?

தன்னை தானே சாட்டையால் அடித்துகொண்ட ராகுல் காந்தி.... காரணம் இதுதானா?

சாட்டையால் அடித்துக்கொண்ட ராகுல்காந்தி

சாட்டையால் அடித்துக்கொண்ட ராகுல்காந்தி

Rahul Gandhi | தெலங்கானாவில் பொனாலு பண்டிகையில் பங்கேற்று கொண்ட ராகுல்காந்தி தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொண்டார். ராகுல் காந்தி சாட்டையால் அடிக்கும்போது தொண்டர்கள் அனைவரும் சத்தம் போட்டனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Hyderabad, India

  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை நடத்தி வருகிறார்.

  கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி அவர் தனது யாத்திரையை தமிழகத்தில் கன்னியாகுமரியில் தொடங்கினார். தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா என அவரது பாதயாத்திரை தொடர்கிறது. இதில் அவ்வப்போது அந்தந்த பகுதிகளில் உள்ள பிரபலங்களும் சேர்ந்து கொள்கிறார்கள்.

  தற்போது ராகுல் காந்தி, தெலங்கானா மாநிலத்தில் யாத்திரையை நடத்தி வருகிறார். ராகுல்காந்தி ஐதராபாத்தில் நேற்று தனது ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டார். இந்த பயணத்தில் ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ பங்கேற்று தனது ஆதரவையும், தனது தந்தை வைகோ சார்பில் வாழ்த்துகளையும் தெரிவித்தார். காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி உள்ளிட்டோரும் இந்த நடைபயணத்தில் கலந்துகொண்டனர்.

  இதையும் படிங்க : வழக்குகள் பட்டியலிடப்படுவதில் நீண்ட தாமதம் ஏற்படுவது ஏன்? - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி

  இந்நிலையில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ருத்ராராமில் இருந்து ராகுல் காந்தி இன்று 57-வது நாளாக பாதயாத்திரையை மீண்டும் தொடங்கினார். முன்னதாக ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா மாநிலங்களின் பழங்குடியின கலைஞர்கள் பாரம்பரியமிக்க 'திம்சா' நடனமாடி ராகுலுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

  பாதயாத்தி்ரையில் சாட்டையால் அடித்துக்கொண்ட ராகுல்காந்தி

  அப்போது கலைஞர்களுடன் சேர்ந்து ராகுல் காந்தியும், உற்சாகமாக நடனமாடினார். அதன்பின்னர் தெலங்கானாவில் பொனாலு பண்டிகையில் பங்கேற்று கொண்ட ராகுல்காந்தி தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொண்டார். ராகுல் காந்தி சாட்டையால் அடிக்கும்போது தொண்டர்கள் அனைவரும் சத்தம் போட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

  Published by:Karthi K
  First published:

  Tags: Congress, Hyderabad, Rahul gandhi, Telangana