அமேதி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்!
அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி போட்டியிடுகிறார்.

ஊர்வலமாக சென்ற ராகுல் காந்தி
- News18
- Last Updated: April 10, 2019, 1:38 PM IST
மக்களவை தேர்தலில் வயநாடு மற்றும் அமேதி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இன்று அமேதி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப்பிரதேசம் மாநிலம் அமேதி மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
கடந்த 4-ம் தேதி வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில், இன்று அமேதி தொகுதியில் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். தாய் சோனியா காந்தி, சகோதரி பிரியங்கா காந்தி மற்றும் அவரது கணவர் ராபர்ட் வதேரா ஆகியோர் மனுத்தாக்கலின் போது உடனிருந்தனர்.

மனுத்தாக்கலுக்கு முன்னதாக திறந்த வாகனத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா, வதேரா மற்றும் அவர்களின் மகன், மகள் ஆகியோர் திறந்த வாகனத்தில் ஊர்வலமாக சென்றனர்.அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி போட்டியிடுகிறார்.
Also See...
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப்பிரதேசம் மாநிலம் அமேதி மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
கடந்த 4-ம் தேதி வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில், இன்று அமேதி தொகுதியில் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

மனுத்தாக்கலுக்கு முன்னதாக திறந்த வாகனத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா, வதேரா மற்றும் அவர்களின் மகன், மகள் ஆகியோர் திறந்த வாகனத்தில் ஊர்வலமாக சென்றனர்.அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி போட்டியிடுகிறார்.
Also See...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.