அதிகரிக்கும் பாலியல் பலாத்கார சம்பவங்கள்: ராகுல் காந்தி கவலை

news18
Updated: April 16, 2018, 7:19 PM IST
அதிகரிக்கும் பாலியல் பலாத்கார சம்பவங்கள்: ராகுல் காந்தி கவலை
ராகுல் காந்தி
news18
Updated: April 16, 2018, 7:19 PM IST
நாட்டில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

ஜம்மு – காஷ்மீர் மாநிலம், கத்துவாவில் 8 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் பாலியல் பலாத்காரத்துக்குப் பின் கொலை செய்யப்பட்டார். இதேபோல், உத்தரப் பிரதேச மாநிலத்தின் உன்னாவ் நகரில் சிறுமியொருவர் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானார்.

இந்நிலையில், குஜராத் மாநிலம் சூரத்தில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி கொல்லப்பட்ட சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இவ்வாறு, நாட்டில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து ராகுல் காந்தி கவலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் இன்று ட்விட்டரில் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது: நாட்டில் கடந்த 2016-ஆம் ஆண்டு மட்டும் 19,675 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புள்ளி விபர அறிக்கை தெரிவிக்கிறது.  இது மிகவும் வெட்கக்கேடானது.

நமது மகள்களுக்கு உரிய நீதி கிடைக்கும் என பிரதமர் மோடி கூறியது உண்மை என்றால் இந்த பாலியல் பலாத்கார வழக்குகளில் விரைந்து நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று அந்தப் பதிவில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
First published: April 16, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்