ஹோம் /நியூஸ் /இந்தியா /

காங்கிரஸ் - டி.ஆர்.எஸ் கூட்டணி குறித்த கேள்வி.. பட்டென பதிலளித்த ராகுல்காந்தி!

காங்கிரஸ் - டி.ஆர்.எஸ் கூட்டணி குறித்த கேள்வி.. பட்டென பதிலளித்த ராகுல்காந்தி!

ராகுல்காந்தி

ராகுல்காந்தி

காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிரியா சமிதி கூட்டணி குறித்து எந்த கேள்விக்கு இடமில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Telangana, India

இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் ராகுல்காந்தி நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைப்பயணம் தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கியது. பின்னர் கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ராகுல்காந்தி நடைபயணத்தைத் தொடர்ந்தார்.

இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தில் கடந்த 23-ம் தேதி ராகுல் காந்தி யாத்திரை நுழைந்தது. தீபாவளியின் காரணமாக யாத்திரைக்கு மூன்று தினங்கள் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த நிலையில் இருதினங்களுக்கு முன்னர் மீண்டும் தொடங்கியது. இந்தநிலையில், தெலங்கானாவில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ‘இந்தியாவில் நீதித்துறை, நிர்வாகத்துறை, ஊடகத்துறையின் மீது திட்டமிட்ட ஒழுங்குப்படுத்தப்பட்ட தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க: பாலியல் வழக்குகளில் இனி இரு விரல் சோதனை நடத்தக் கூடாது - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும்போது ஆர்.எஸ்.எஸ் பிடியிலிருந்து இந்த நீதித்துறை, நிர்வாகத்துறை, ஊடகத்துறைகளுக்கு விடுதலையளிப்பதை நாங்கள் உறுதி செய்வோம். காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கூட்டணி குறித்து எந்தக் கேள்விக்கு இடமில்லை. இதுகுறித்து தவறான கருத்து பரவிக் கொண்டிருக்கிறது. தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் பெயர் பாரத் ராஷ்டிரிய சமிதி என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. சந்திரசேகர ராவ் தேசிய கட்சியை உருவாக்க விரும்பினால் அது நல்லதுதான். ஒருவேளை அவர் உலக கட்சி ஆரம்பிக்க விரும்பினால் அவர் சீனாவில் போட்டியிடலாம், பிரிட்டனில் போட்டியிடலாம். அதுவும் நல்லதுதான்.

இதையும் படிங்க..  85 ஆண்டுகளுக்கு முன் தொலைந்த அமெரிக்க பயணியின் கேமராக்கள்.. புதைந்திருக்கும் பொக்கிஷம் - கனடாவின் பனிமலையில் மீட்பு

ஆனால், பா.ஜ.கவின் சித்தாந்தத்தை காங்கிரஸ் சித்தாந்தத்தால் மட்டுமே தோற்கடிக்க முடியும் என்பதுதான் நிதர்சனம். எங்களுடைய கட்சி ஜனநாயகமான கட்சி. அது எங்களுடைய மரபணுவில் உள்ளது. அதனால், நாங்கள் சர்வாதிகாரத்துடன் செயல்படமாட்டோம். சமீபத்தில் ஜனநாயக முறைப்படி எங்களது கட்சியின் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க, டி.ஆர்.எஸ் எப்போது அவர்களது கட்சிக்கு தேர்தல் நடத்துவார்கள் என்று நான் ஆவலுடன் இருக்கிறேன்’ என்று தெரிவித்தார்.

Published by:Archana R
First published:

Tags: Congress, Rahul gandhi