ஹோம் /நியூஸ் /இந்தியா /

 “உங்கள் உயிரை தியாகம் செய்த இந்தியாவை சிதைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் ” - இந்திரா நினைவு தினத்தில் ராகுல் உருக்கம்!

 “உங்கள் உயிரை தியாகம் செய்த இந்தியாவை சிதைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் ” - இந்திரா நினைவு தினத்தில் ராகுல் உருக்கம்!

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவுநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில், சோனியா காந்தி அஞ்சலி செலுத்தினார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  “ உங்கள் உயிரை தியாகம் செய்த இந்தியாவை சிதைக்க நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் ” என இந்திரா காந்தி நினைவுதினத்தையொட்டி ராகுல் ட்விட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

  இந்தியாவின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தி, கடந்த 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி அவரது மெய்காப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

  Imageமுன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவரும், இந்திராவின் மருமகளுமான சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

  Image

  இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றுள்ள ராகுல் காந்தி, நேரில் அஞ்சலி செலுத்த முடியததால், அவர் ட்விட்டர் பக்கத்தில் அஞ்சலி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.  அந்த பதிவில் "பாட்டி, நான் உங்கள் அன்பு மற்றும் மதிப்பு இரண்டையும் என் இதயத்தில் சுமந்துகொண்டிருக்கிறேன். உங்கள் உயிரை தியாகம் செய்த இந்தியாவை சிதைக்க நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

  Published by:Lakshmanan G
  First published:

  Tags: Congress President Rahul Gandhi, Indira Gandhi