பழங்குடியின மக்களுடன் ராகுல் காந்தி பாரம்பரிய நடனம் - வீடியோ

பழங்குடியின மக்களுடன் ராகுல் காந்தி பாரம்பரிய நடனம் - வீடியோ
ராகுல் காந்தி நடனம்
  • News18
  • Last Updated: December 27, 2019, 4:04 PM IST
  • Share this:
அனைத்து சாதிகள் மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்களும் இடம்பெறாமல் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி காண முடியாது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

சத்தீஸ்கர் தலைநகர் ராய்பூரில் நடைபெற்ற ஆதிவாசி மகோத்சவ நிகழ்ச்சியில் பங்கேற்ற ராகுல் காந்தி இவ்வாறு கூறினார். மக்களவையிலும் மாநில சட்டப்பேரவைகளிலும் ஒவ்வொரு இந்தியரின் குரல் ஒலிக்கும் வரையில் வேலைவாய்ப்பின்மையும் நாட்டின் பொருளாதார நிலையும் சீரடையாது என்றும் குறிப்பிட்ட ராகுல் காந்தி பின்னர் சத்தீஸ்கர் பழங்குடியினரின் பாரம்பரியப்படி தலையில் மயிலிறகுடன் கூடிய தலைப்பாகை அணிந்து மத்தளம் கொட்டி நடனமாடினார்.

இதனால், காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.
First published: December 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading