"இந்தியாவின் பிம்பத்தை மோடி அரசு குலைத்து விட்டது" - ராகுல் காந்தி

ராகுல் காந்தி
  • Share this:
அன்புக்கும், சகோதரத்துக்கும் பெயர் பெற்ற நாடு இந்தியா என்ற பிம்பத்தை பிரதமர் மோடியின் அரசு சீர்குலைத்து விட்டதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, இந்தியா என்றால் அன்பு மற்றும் சகோதரத்துவம் என்றும், பாகிஸ்தான் என்றால் வெறுப்பு மற்றும் பிரிவினை என்றும் உலகம் கருதிக்கொண்டிருந்ததாக தெரிவித்தார்.

ஆனால் இந்த பிம்பத்தை பிரதமர் மோடி அரசு குலைத்து விட்டதாகவும் ராகுல்காந்தி சாடினார். இதனால் முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய தயங்குவதாகவும் அவர் கூறினார். ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற பிரதமர் மோடி தவறிவிட்டதாகவும் ராகுல்காந்தி குற்றம்சாட்டினார். 
First published: January 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading