விஞ்ஞானிகளால் பெருமைப்படுகிறேன்....! ராகுல் காந்தி ட்வீட்

செயற்கைக்கோள்களை தடுத்து அழிக்கும் ஏவுகணைகள் 2012-ம் ஆண்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கான இறுதிகட்டப்பணிகள் முடிந்து தற்போது சோதனை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் கூறுகின்றன.

news18
Updated: March 27, 2019, 2:51 PM IST
விஞ்ஞானிகளால் பெருமைப்படுகிறேன்....! ராகுல் காந்தி ட்வீட்
ராகுல் காந்தி
news18
Updated: March 27, 2019, 2:51 PM IST
மிஷன் சக்தி-க்காக விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியையும் கிண்டல் செய்துள்ளார்.

விண்வெளியில் உள்ள செயற்கைக்கோள்களை தகர்க்கும் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி இன்று அறிவித்தார்.

அமெரிக்கா, சீனா, ரஷியாவுக்கு அடுத்தபடியாக இந்த ஏவுகணைகளை கொண்டுள்ள நாடாக இந்தியா இருக்கும் என்றும் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் குறிப்பிட்டார்.

எனினும், இது பிரதமர் மோடியின் சாதனை என்று பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) அறிவிக்க வேண்டியதை, பிரதமர் மோடி அறிவித்து தேர்தல் நேரத்தில் தனக்கான ஆதாயமாக்க பார்க்கிறார் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.செயற்கைக்கோள்களை தடுத்து அழிக்கும் ஏவுகணைகள் 2012-ம் ஆண்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கான இறுதிகட்டப்பணிகள் முடிந்து தற்போது சோதனை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் கூறுகின்றன.

இந்நிலையில், விஞ்ஞானிகளின் இந்த சாதனைக்காக DRDO-வுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிவிட்டுள்ள ட்வீட்டில், “வெல்டன் DRDO, உங்களது செயல்பாட்டால் அதீத பெருமையாக உள்ளது. மேலும், பிரதமர் மோடிக்கு எனது நாடக தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
First published: March 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...