ஹோம் /நியூஸ் /இந்தியா /

தேச ஒற்றுமை யாத்திரையின் 100வது நாள் நடைபயணத்தில் ராகுல் காந்தி

தேச ஒற்றுமை யாத்திரையின் 100வது நாள் நடைபயணத்தில் ராகுல் காந்தி

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

100வது நாள் யாத்திரையில் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ராஜஸ்தான் மாநிலம் தௌசாவில் இருந்து தேச ஒற்றுமை யாத்திரையின் 100வது நாள் நடைபயணத்தை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தொடங்கியுள்ளார்.

கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி தேச ஒற்றுமை பயணத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தொடங்கினார். தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கப்பட்ட நடைபயணம் ஜம்மு காஷ்மீரில் நிறைவடையவுள்ளது.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை தொடர்ந்து தற்போது ராஜஸ்தானில் ராகுல் காந்தியின் தேச ஒற்றுமை யாத்திரை நடைபெற்று வருகிறது. இந்த பயணத்தின் போது ஆங்காங்கே அமைக்கப்படும் பொதுக்கூட்ட மேடைகளில் உறையாற்றி வரும் ராகுல், பொதுமக்களையும் சந்தித்து பேசி வருகிறார்.

இதையும் படிங்க: ஆதார் இருந்தால் போதும்... நாட்டின் எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் - மத்திய அரசு

 

ராகுல் காந்தியின் இந்த நடைபயணத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இன்று யாத்திரை 100வது நாளை எட்டியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் தௌசாவில் தொடங்கியுள்ள 100வது நாள் யாத்திரையில் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Congress, Rahul gandhi