சவால் விடுகிறேன்..! மோடியால் மாணவர்களுக்கு முன்னால் பேசமுடியுமா? ராகுல் காந்தி ஆவேசம்

இளைஞர்களின் பிரச்னைகள் குறித்து பேசுவதற்காக பதிலாக பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவை திசைதிருப்புவதையும் மக்களிடம் பிரிவினைகளையும் ஏற்படுத்திவருகிறார்.

சவால் விடுகிறேன்..! மோடியால் மாணவர்களுக்கு முன்னால் பேசமுடியுமா? ராகுல் காந்தி ஆவேசம்
ராகுல்காந்தி
  • News18
  • Last Updated: January 13, 2020, 6:11 PM IST
  • Share this:
நான் சவால் விடுகிறேன்... பிரதமருக்கு மாணவர்களுக்கு முன்னாள் நின்று பேசுவதற்கு தைரியம் உள்ளதா? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் மிகப் பெரிய போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. பா.ஜ.கவைத் தவிர பெரும்பாலும் அனைத்து கட்சிகளும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்தநிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் இந்தியன் கம்யூனிஸ்ட, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் சார்பில் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் திருமாவளவன் கலந்துகொண்டார். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக தி.மு.க இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளது.


இந்தக் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ‘இளைஞர்களின் பிரச்னைகள் குறித்து பேசுவதற்காக பதிலாக பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவை திசைதிருப்புவதையும் மக்களிடம் பிரிவினைகளையும் ஏற்படுத்திவருகிறார். இளைஞர்களின் குரல்கள் சட்டப்பூர்வமானவை. அந்தக் குரல்கள் ஒடுக்கப்படக்கூடாது. அரசு அவர்களது குரல்களைக் கேட்க வேண்டும்.

இந்தியப் பொருளாதாரம் ஏன் பேரழிவைச் சந்தித்தது என்று இளைஞர்களிடம் பிரதமர் மோடி விளக்கவேண்டும். அவருக்கு இளைஞர்கள் முன் நின்று பேசுவதற்கு தைரியம் கிடையாது. நான் சவால் விடுகிறேன். ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்துக்குச் சென்று காவல்துறையினர் உதவியில்லாமல் மாணவர்கள் முன்னால் நின்று இந்த நாட்டுக்கு என்ன செய்யப் போகிறேன்? என்று அவரால் விளக்க முடியுமா?’ என்று கேள்வி எழுப்பினார்.

Also see:

 
First published: January 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading