ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஷூவை தொலைத்த சிறுமியை தோளில் சுமந்து சென்ற ராகுல்.. பாரத் ஜோடோ யாத்திரையில் நெகிழ்ச்சி..

ஷூவை தொலைத்த சிறுமியை தோளில் சுமந்து சென்ற ராகுல்.. பாரத் ஜோடோ யாத்திரையில் நெகிழ்ச்சி..

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

இந்த நடைபயணம் தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் என 9 மாநிலங்கள், 46 மாவட்டங்கள் என கிட்டத்தட்ட 3,000 கி.மீ நீண்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

தேச ஒற்றுமை பயணத்தின் இடையே காலணியை தொலைத்த சிறுமியை, ராகுல் காந்தி தூக்கி சுமந்தது இணையத்தில் வைரலாகியுள்ளது.

இந்தியாவை ஒருங்கிணைக்கும் பயணமாக காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டு வருகிறார். செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் ஆரம்பித்த இந்த நடைபயணம் தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் என 9 மாநிலங்கள், 46 மாவட்டங்கள் என கிட்டத்தட்ட 3,000 கி.மீ நீண்டது.

இந்த பயணத்தில், 9 மாநிலங்களைக் கடந்து டெல்லியைச் சென்றடைந்தார் ராகுல் காந்தி. அவரது யாத்திரையில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இந்நிலையில் யாத்திரையில் பங்கேற்ற சிறுமி ஒருவர் கூட்ட நெரிசலில் தனது காலணியை தொலைத்தார். இதையறிந்த ராகுல் காந்தி, சிறுமியிடம் விசாரித்தார்.

பின்னர் சிறுமியை தனது தோளில் தூக்கி நடந்தார். இது அங்கிருந்தவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்த காட்சி, தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

First published:

Tags: Congress, Delhi, Rahul gandhi