கேரளத்தை ஊழலின் மையமாக மாற்றிவிட்டனர் - அமித் ஷா குற்றச்சாட்டு

கேரளத்தை ஊழலின் மையமாக மாற்றிவிட்டனர் - அமித் ஷா குற்றச்சாட்டு

அமித் ஷா

கேரள மக்கள் ராகுலிடம் கேட்க வேண்டும் இங்கே நீங்கள் கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக போராடுகிறீர்கள். வங்காளத்தில் அதே கம்யூனிஸ்ட்களுடன் கூட்டணி வைத்துள்ளீர்கள்.

 • Share this:
  கேரள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தேசிய தலைவர்கள் அங்கு முகாமிட்டுள்ளனர். கேரள மாநிலம் சத்தனூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பா.ஜ.க தலைவர் அமித் ஷா பங்கேற்றார். அப்போது பேசியவர், “ராகுல் காந்தி கேரளாவுக்கு சுற்றுலா வந்தார். கேரள மக்கள் அவரிடம் கேட்க வேண்டும். இங்கே நீங்கள் கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக போராடுகிறீர்கள். வங்காளத்தில் அதே கம்யூனிஸ்ட்களுடன் கூட்டணி வைத்துள்ளார்கள். இது எந்த மாதிரியான கட்சி. கேரள மாநிலம் இரண்டு வெள்ளத்தை கண்டுள்ளது. 500 பேர் தங்கள் வாழ்க்கையை இழந்துள்ளனர். இடதுசாரிகள் நம்முடைய இராணுவத்தை மிகவும் தாமதமாகத் தான் அழைத்தார்கள். கேரள மக்களின் மீது அவர்களுக்கு அக்கறை இல்லை.

  கேரளம் ஒரு காலத்தில் சுற்றுலா மற்றும் வளர்ச்சியின் முன்மாதிரியாக கருதப்பட்டது. அதிகம் படித்த மற்றும் அமைதியை விரும்பும் மாநிலமாக அறியப்பட்டது. ஆனால் இன்றோ வலது மற்றும் இடதுசாரி அரசுகள் ஊழலின் மையமாக கேரளத்தை மாற்றிவிட்டனர். கோயில் தொடர்பான பிரச்னைகளில் அரசு தலையிடக்கூடாது என பாஜக நம்புகிறது. கோயில் தொடர்பான பிரச்னைகளை பக்தர்களிடமே விட்டுவிட வேண்டும்” என்றார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ramprasath H
  First published: