கர்நாடகா பாணியில் சட்டீஸ்கர் காங்கிரஸ்.. ராகுல் மீட்டிங்கின் பின்னணி என்ன?

சட்டீஸ்கர் காங்கிரஸ்

சட்டீஸ்கர் முதல்வர் பதவி மாற்றம் தொடர்பாக முதல்வர் பூபேஷ் பாகெல் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் டி.எஸ்.சிங் தியோ ஆகியோர் டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

  • Share this:
சட்டீஸ்கர் மாநில முதல்வர் பதவியிலிருந்து பூபேஷ் பாகல் நீக்கப்படுகிறாரா? இது தான் சட்டீஸ்கர் காங்கிரஸில் சுழன்றுகொண்டிருக்கும் விஷயமாக கடந்த சில மாத காலமாக இருந்து கொண்டிருக்கிறது. பூபேஷ் பாகலை நீக்க வேண்டிய காரணம் தான் என்ன?

சட்டீஸ்கர் முதல்வர் பதவி மாற்றம் தொடர்பாக முதல்வர் பூபேஷ் பாகெல் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் டி.எஸ்.சிங் தியோ ஆகியோர் டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். பாகெல் நேற்றே டெல்லி சென்ற நிலையில், தியோ இன்று டெல்லி வந்தடைந்துள்ளார். இவ்விருவரும் காங்கிரஸ் தலைமை மற்றும் ராகுல் காந்தி ஆகியோருடன் சந்திக்கின்றனர்.

Also Read:  மத்திய அமைச்சர் திடீர் கைது! – 20 ஆண்டுகளில் முதல் முறை…

2018ம் ஆண்டு சட்டீஸ்கரில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த போது பூபேஷ் பாகெல் மற்றும் தியோ இருவரும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஒப்பந்தம் அப்போதே ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விஷயத்தில் தற்போது இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Also Read:  ஆப்கனுக்கு உக்ரைன் மக்களை மீட்கச் சென்ற பயணிகள் விமானம் ஈரானுக்கு கடத்தல்!

தியோ இன்று ராகுல் காந்தி இல்லத்திற்கு சென்ற போது செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது கட்சியின் தலைமை எந்தவிதமான பொறுப்புகளை கொடுத்தாலும் அதனை ஏற்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார், அதே நேரத்தில் முதல்வர் பதவியில் மாற்றம் இருக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் அந்த பொறுப்பில் இரண்டரை ஆண்டுகளில் மாற்றம் இருக்காது என கூற முடியாது. பேச்சுவார்த்தை தொடருவதாக தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் இதே பாணியை தான் பாஜக கையாண்டது. அங்கு முதல்வராக இருந்த எடியூரப்பா இரண்டு ஆண்டுகள் முதல்வராக இருந்த பின்னர் தற்போது பசவராஜ் பொம்மை புதிய முதல்வராக பொறுப்புக்கு வந்துள்ளார். தற்போது இதே பாணியை தான் காங்கிரஸும் பின்பற்றுவதாக அரசியல் விமர்சகர்கள் பேசிவருகிறார்கள்.
Published by:Arun
First published: