பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ராகுல் காந்தி சைக்கிள் பேரணி

ராகுல் காந்தி

ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்தினர்.

 • Share this:
  பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்றம் நோக்கி ராகுல் காந்தி சைக்கிள் பேரணி நடத்தினார். டெல்லியில் எதிர்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆலோசித்த பின்னர் அவர் நாடாளுமன்றத்திற்கு சைக்கிளில் சென்றார்.

  பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம், முக்கிய நபர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியாயின. அதன்படி, அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்களின் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம்அனுப்பினர்.

  இந்நிலையில், பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர் கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், நாடாளுமன்றம் முடங்கி வருகிறது. நாடு முழுவதும் பெகாசஸ் விவகாரம் புயலைக் கிளப்பி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்தினர்.

  இந்த கூட்டத்தில் 15 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது, பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம், வேளாண் சீர்திருத்த சட்டங்கள், பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயர்வு குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அப்போது திட்டமிடப்பட்டது.  பின்னர் சைக்கிள் பேரணி நடத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்திற்கு எதிர்கட்சி எம்.பி.க்களுடன் ராகுல் காந்தி சைக்கிள் பேரணி நடத்தினார். வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகவும் கடந்த வாரம் ராகுல் காந்தி டிராக்டர் பேரணி நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில், பெகசாஸ் விவகாரம் தொடர்பாக இன்றும் அமளி ஏற்பட்டதால் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 19ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் சபை நடவடிக்கைகளை நடத்த விடாமல் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. எனினும், அமளிக்கு இடையில் முக்கிய மசோதாக்கள் மீது விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

  Must Read :  பெகாசஸ் விவகாரம்... மாதிரி நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்த எதிர்க்கட்சிகள் திட்டம்

  இந்நிலையில், எதிர்க்கட்சிகளை சமாளிப்பது குறித்த பாஜக எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் பலர் கலந்து கொண்டனர். அப்போது பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், தினமும் முழக்கங்களை எழுப்பி நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் எதிர்க்கட்சிகள் தடுக்கின்றன என்று குற்றம் சாட்டினார். நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் அவமதிப்பதாகவும் கூறினார்.
  Published by:Suresh V
  First published: