நாட்டில் தற்போது நிலவும் மின்சார நெருக்கடி, வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் பிரச்னை மற்றும் பணவீக்கம் தொடர்பாக
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சித்ததுடன், பிரதமர்
மோடியின் எட்டு ஆண்டுகால தவறான நிர்வாகம் ஒரு ஆய்வு என்றும்
குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ராகுல் காந்தி,
‘மின்சார நெருக்கடி
வேலை நெருக்கடி
விவசாயிகள் நெருக்கடி
பணவீக்க நெருக்கடி
பிரதமர் மோடியின் எட்டு ஆண்டு கால தவறான நிர்வாகம் என்பது, ஒரு காலத்தில் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா இருந்ததை எவ்வாறு அழிப்பது என்பது பற்றிய ஒரு ஆய்வு ஆகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க | ஆசிரியர்களை மிரட்டும் மாணவர்கள்… பள்ளி மாணவர்களிடம் அதிகரிக்கும் மொபைல் போன் கலாச்சாரம்… தீர்வு என்ன? உளவியலாளரின் கைட்லைன்ஸ் இதோ!
முன்னாள் காங்கிரஸ் தலைவரின் இந்த விமர்சனம், பிரதமர் மோடி தனது மூன்று நாள் ஐரோப்பா சுற்றுப் பயணத்தை தொடங்கிய முதல் நாளில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய தகவல்களின்படி, பிரதமர் மோடி பல நாடுகளுக்கான தனது பயணத்தில் 65 மணிநேரத்தில் 25 முக்கிய சந்திப்புகளில் ஈடுபடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரம் 30ஆம் தேதி, நாட்டில் நிலவும் மின்சார நெருக்கடி குறித்து ராகுல் காந்தி மோடியை கடுமையாக சாடியிருந்தார். ட்விட்டரில் ஒரு பதிவில், நிலக்கரி விநியோகத்தில் பற்றாக்குறை மற்றும் நாட்டில் மின்சாரத் தேவை அதிகரித்து வரும் நிலையில் பராமரிப்புக்காக மூடப்பட்ட ஆலைகளின் விளைவாக ஏற்படும் நெருக்கடியின் தற்போதைய தோல்விக்கு யாரைக் குறை கூறுவீர்கள் என்று பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பினார் ராகுல் காந்தி. மேலும், அந்த பதிவுடன், ராகுல் காந்தி பிரதமரின் கடந்தகால உரைகளைக் காட்டும் வீடியோ ஒன்றையும் பகிர்ந்தார். அதில் அவர், 24 மணி நேரமும் நாட்டில் மின்சாரம் கிடைக்கும் என்று உறுதியளித்திருந்தது குறிப்பிடப்பட்டிருந்தது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.