தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள மேற்கொள்ளும் செலவினைக் குறைத்து மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி அறிவுரை

தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள மேற்கொள்ளும் செலவினைக் குறைத்து மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி அறிவுரை

ராகுல் காந்தி

தங்களை விளம்பரப்படுத்துவதற்கும், தேவையற்ற திட்டத்துக்கு செலவிடுவதற்கும் பதிலாக சுகாதாரத்துறைக்கும், தடுப்பூசி எளிதாகக் கிடைக்கவும், ஆக்ஸிஜன் தட்டுப்பாடின்றி கிடைக்கவும் செலவிடுங்கள் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

 • Share this:
  தங்களை விளம்பரப்படுத்துவதற்கும், தேவையற்ற திட்டத்துக்கு செலவிடுவதற்கும் பதிலாக சுகாதாரத்துறைக்கும், தடுப்பூசி எளிதாகக் கிடைக்கவும், ஆக்ஸிஜன் தட்டுப்பாடின்றி கிடைக்கவும் செலவிடுங்கள் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

  நாட்டில் கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமடைந்து, நாள்தோறும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு காப்பாற்ற முடியாமல் ஏராளமானோர் பலியாகி வருகின்றனர்.

  இந்நிலையில் ஆக்சிஜன் மற்றும் ஆக்சிஜன் தயாரிப்பு உபகரணங்களுக்கான சுங்க வரியை ரத்து செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

  இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் மத்திய அரசு தேவையற்ற தி்ட்டங்களுக்கு செலவிடுவதற்கு பதிலாக சுகாதாரத்துறைக்கு செலவிடலாம் எனத் தெரிவித்துள்ளார். குறிப்பாக மத்திய விஸ்டா திட்டம், புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டத்துக்கு ஆயிரக்கணக்கான கோடி திருப்பிவிடப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி ராகுல் காந்தி இந்த கருத்தைத் தெரிவித்துள்ளா்

  இதுகுறித்து ராகுல் காந்தி ட்விட்டரில் விடுத்த கோரிக்கையில் “மத்திய அரசு தன்னை விளம்பரப்படுத்துவதற்கும், தேவையற்ற திட்டங்களுக்கும், செலவிடும் தொகையை நிறுத்தி, அந்தத் தொகையை தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைத்தல், ஆக்ஸிஜன் பற்றாக்குறையைக் போக்குதல் உள்ளிட்ட சுகாதாரத்துறைக்குச் செலவிடலாம்.

  இனிவரும் நாட்களில் கொரோனா வைரஸால் சிக்கல் இன்னும் தீவிரமாகும்.இதை சமாளிக்க இந்த தேசம் தயாராக வேண்டும். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அவலநிலை தாங்கிக்கொள்ள முடியாதது.” எனத் தெரிவித்துள்ளார்.

  காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரமும், “2-வது அலை குறித்து தெரிந்தும், நேற்றுவரை ஏன் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இது ஒட்டுமொத்த மற்றும் மிக மோசமான அலட்சியப் போக்கு இல்லையா? இதற்கு ஒருவர் கூட பொறுப்பேற்க மாட்டீர்கள். இதற்காக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனும், சுகாதாரத்துறைச் செயலாளரும் பதவி விலக வேண்டாமா?

  மருத்துவமனையில் தங்களின் அன்புக்குரியவர்களை சிகிச்சைக்காக அனுமதித்துவிட்டு, மக்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். தங்கள் உறவினர்களுக்க சிகிச்சை அளிக்கக் கோரி மருத்துவர்களிடம் மன்றாடுகிறார்கள். நோயாளிகளை சிகிச்சைக்காக அழைத்துவரும் போது, தங்கள் முதுகில் ஆக்சிஜன் சிலிண்டரைக் கட்டிக்கொண்டு செல்கிறார்கள்.” என்று மத்திய அரசைச் சாடியது குறிப்பிடத்தக்கது.
  Published by:Muthukumar
  First published: