மோடியை திருடன் என்று கூறிய விவகாரம்: மன்னிப்பு கோரினார் ராகுல் காந்தி!

அந்த வழக்கில், இரண்டுமுறை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த ராகுல் காந்தி, மோடியை திருடன் என்று கூறி உச்ச நீதிமன்றத்தை மேற்கோள் காட்டியதற்காக வருத்தம் தெரிவித்தார். ஆனால், இரண்டுமுறையும் ராகுல் காந்தி மன்னிப்பு கோரவில்லை.

மோடியை திருடன் என்று கூறிய விவகாரம்: மன்னிப்பு கோரினார் ராகுல் காந்தி!
ராகுல் காந்தி
  • News18
  • Last Updated: April 30, 2019, 5:30 PM IST
  • Share this:
மோடியை திருடன் என்று கூறி உச்ச நீதிமன்றத்தை மேற்கோள் காட்டியதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கோரினார்.

ரஃபேல் விவகாரத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பின்னர், அந்த விவகாரம் தொடர்பாக தி இந்து ஆங்கில நாளிதழில் வெளியான ஆதாரத்தின் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தள்ளபடி செய்யப்பட்டது.

திருடப்பட்ட ஆவணங்களில் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மத்திய அரசின் வாதத்தை ஏப்ரல் 10-ம் தேதி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், வழக்கை விசாரணைக்கு ஏற்றது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவைக் குறிப்பிட்டு, மோடியை திருடன் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது என்று ராகுல் காந்தி பேசினார்.


அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராகுல் காந்தியின் மீது பா.ஜ.க எம்.பி. மீனாட்சி லேகி உச்ச நீதிமன்றத்தில், நீதிமன்ற அவதூறு வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில், இரண்டுமுறை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த ராகுல் காந்தி, மோடியை திருடன் என்று கூறி உச்ச நீதிமன்றத்தை மேற்கோள் காட்டியதற்காக வருத்தம் தெரிவித்தார். ஆனால், இரண்டுமுறையும் ராகுல் காந்தி மன்னிப்பு கோரவில்லை. இந்தநிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது, ‘மோடி குறித்து பேசியதை ராகுல் காந்தி நியாயப்படுத்த முயற்சிக்கிறார். அவர், தவறை ஒப்புக்கொள்ளவேண்டும். அவர், தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்திலிருந்து அவர் முரண்படுகிறார். அவர், தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் மன்னிப்பு கேட்கப்பட்டுள்ளதா?’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ராகுல் காந்தியின் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, ‘ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் விதமாக, புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்படும்’ என்று தெரிவித்தார்.


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see:

First published: April 30, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்