விமானம் வேண்டாம்; மக்களைச் சந்திக்க சுதந்திரம் வேண்டும்! காஷ்மீர் ஆளுநருக்கு ராகுல் காந்தி பதிலடி

காஷ்மீருக்கு வரவேண்டும் என்று ராகுல் காந்திக்கு நான் அழைப்புவிடுக்கிறேன். காஷ்மீருக்கு வருவதற்காக நான் உங்களுக்கு விமானம் அனுப்புகிறேன்.

விமானம் வேண்டாம்; மக்களைச் சந்திக்க சுதந்திரம் வேண்டும்! காஷ்மீர் ஆளுநருக்கு ராகுல் காந்தி பதிலடி
ராகுல் காந்தி
  • News18
  • Last Updated: August 13, 2019, 3:15 PM IST
  • Share this:
'எங்களுக்கு விமானம் தேவையில்லை. பொதுமக்களிடம் சென்று பேசுவதற்கு முழு சுதந்திரம் அளித்தால் போதுமானது' என்று காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் அழைப்புக்கு ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கும், அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதற்கும் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துவருகிறது. காஷ்மீரில் வன்முறைச் சம்பவங்கள் நிலவுவதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்திருந்தார்.

அதற்கு பதிலளித்த காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக், ‘காஷ்மீருக்கு வரவேண்டும் என்று ராகுல் காந்திக்கு நான் அழைப்புவிடுக்கிறேன். காஷ்மீருக்கு வருவதற்காக நான் உங்களுக்கு விமானம் அனுப்புகிறேன். வந்து களத்தைப் பார்த்துவிட்டு பின்னர் அதுகுறித்து பேசவேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.


அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி ட்விட்டர் பதிவில், ‘ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியை வந்து பார்வையிட வேண்டும் என்ற உங்களுடைய அழைப்பை நானும் எதிர்கட்சிகளின் பிரதிநிதிக் குழுவும் ஏற்றுக் கொள்கிறோம். எங்களுக்கு விமானம் தேவையில்லை.


ஆனால், தயவுசெய்து சுதந்திரமாக சென்று மக்களைச் சந்திப்பதற்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்துங்கள். நம்முடைய ராணுவ்வீரர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் முக்கிய அரசியல்கட்சித் தலைவர்களைச் சந்திக்க அனுமதிக்கவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Also see:

First published: August 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்