பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில்
காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னியை ராகுல் காந்தி அறிவித்தார்.
பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அந்தந்தக் கட்சிகள் அந்தந்த மாநிலங்களின் முதல்வர் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.
177 தொகுதிகளைக்கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவைக்கு ஒரேகட்டமாக பிப்ரவரி 20-ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனிடையே, பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சி முதல்வர் வேட்பாளர் யார் என குழப்பம் நிலவிவந்தது. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஆம் ஆத்மி மற்றும் பாஜக போன்ற எதிர்க்கட்சிகள், காங்கிரஸ் தனது முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வதற்குக்கூட பல்வேறு போராட்டங்களை நடத்திவருகிறது என பல விமர்சனங்களை முன்வைத்து பரப்புரை கூட்டங்களை நடத்தின.
இதற்கு ஏற்றபோல், தேர்லுக்கு முந்தைய கருத்து கணிப்பு முடிவுகளும், ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களை கைப்பற்றி பஞ்சாபில் ஆட்சியை பிடிக்கும் என அறிவித்தன. ஆம் ஆத்மி கட்சியும் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை, இலவச மின்சாரம் என பல்வேறு வாக்குறுதிகளை அளித்து தன் செல்வாக்கை உயர்த்தி வந்தது.
இதையும் படிங்க: பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்... மருத்துவமனையில் உயிர் பிரிந்தது
இந்நிலையில், லூதியானாவில் இன்று நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் சரண்ஜித் சன்னியை முதல்வர் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவித்தார். தற்போது பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி நடத்திவரும் நிலையில் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி கூறும்போது, பஞ்சாப் மக்கள் தங்களின் முதல்வர் வேட்பாளர் ஓர் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். அவரால் தான் ஏழைகளின் வலியை உணர முடியும் என்று விரும்பினர். அவர்களின் விருப்பப்படி வேட்பாளரைத் தேர்வு செய்வது கடினமாகவே இருந்தது. தொடர்ந்து, சரண்ஜித் சிங் சன்னி தான் காங்கிரஸின் முதல்வர் வேட்பாளராக இருப்பார்" என்று ராகுல் காந்தி அறிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.