• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ராகுல் காந்தி, பிரியங்கா அனுபவம் இல்லாதவங்க - காங்கிரஸ் தலைவர் பகீர் பேச்சு

ராகுல் காந்தி, பிரியங்கா அனுபவம் இல்லாதவங்க - காங்கிரஸ் தலைவர் பகீர் பேச்சு

rahul priyanka

rahul priyanka

சித்துவை பஞ்சாப் முதலமைச்சராக விடாமல் தடுக்க எந்தவித தியாகமும் செய்யத் தயாராக இருக்கிறேன்.

  • Share this:
ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இருவரும் அனுபவமற்றவர்கள் என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பஞ்சாப் முதல்வருமான கேப்டன் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் பதவியிலிருந்து சில தினங்களுக்கு முன் திடீரென ராஜினாமா செய்தார் கேப்டன் அமரிந்தர் சிங். அவருக்கும் சக காங்கிரஸ் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்துவிற்கும் இடையே நீண்ட காலமாகவே நீயா நானா போட்டி இருந்து வந்தது. இந்நிலையில் நவ்ஜோத் சிங் சித்துவின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கொடுத்த நெருக்கடிக்கு பணிந்தது காங்கிரஸ் தலைமை. முதல்வர் பதவியை ராஜினாமா செய்த போதே தான் காங்கிரஸில் அவமானத்தை சந்தித்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் கேப்டன் அமரிந்தர் சிங்.

அமரிந்தர் சிங், பாஜகவுக்கு தாவலாம் என தகவல்கள் வெளியான நிலையில், நான் காங்கிரஸில் தான் இருக்கிறேன் என சர்ச்சைகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்தார். அமரிந்தர் விலகலையடுத்து சரஞ்சித் சிங் சன்னி பஞ்சாபின் புதிய முதல்வரானார்.

இதனிடையே, பஞ்சாப் மாநில காங்கிரஸ் பொறுப்பாளரான ஹரிஷ் சிங் ராவத் கூறுகையில், எதிர்வரும் 2022 பஞ்சாப் சட்டமன்ற தேர்தலை நவ்ஜோத் சிங் சித்துவின் தலைமையில் அவரை முதல்வர் வேட்பாளராக கொண்டு காங்கிரஸ் கட்சி சந்திக்கும் என தெரிவித்தார்.

Also Read:   ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – கல்வித் தகுதி, சம்பளம் உட்பட முழு விவரம்

இதனையடுத்து கொதிப்படைந்துள்ள கேப்டன் அமரிந்தர் சிங், இன்று செய்தியாளர்களை சந்தித்த போது, நவ்ஜோத் சிங் சித்துவை கடுமையாக சாடி பேசினார்.

கேப்டன் அமரிந்தர் சிங் கூறுகையில், “ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி எனது பிள்ளைகள் போன்றவர்கள், அவர்களுக்கு அனுபவம் கிடையாது, அவர்களின் ஆலோசர்கள் அவர்களை தவறாக வழிநடத்துகின்றனர். இது இப்படி நடந்திருக்கக் கூடாது, நான் மிகவும் காயமடைந்துள்ளேன்.

சித்துவை பஞ்சாப் முதலமைச்சராக விடாமல் தடுக்க எந்தவித தியாகமும் செய்யத் தயாராக இருக்கிறேன். சித்துவை தோற்கடிக்க பலமான வேட்பாளரை அவருக்கு எதிராக நிறுத்துவேன். சித்து பஞ்சாபுக்கு தீங்கானவர். அவரின் தலைமையில் காங்கிரஸால் இரட்டை இலக்க சீட்களை கூட பெறாது.

Also Read:  கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்போகும் மத்திய அரசு – எவ்வளவு தெரியுமா?

நான் ராஜினாமா செய்யத் தயார் என சோனியாவிடம் மூன்று வாரங்களுக்கு முன்பே தெரிவித்தேன். அவர் தான் என்னை முதல்வராக தொடருங்கள் என கூறினார்.

தேச பாதுகாப்புக்கு சித்து ஆபத்தானவர். அவருக்கு பாகிஸ்தானுடன் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. தினமும் ட்ரோன்கள், ஆயுதங்கள், வெடி மருந்துகள், துப்பாக்கிகள், ஏ.கே. துப்பாக்கிகள், ஹெராயின் போன்றவை பஞ்சாபுக்குள் வந்துகொண்டிருக்கிறது. இவையெல்லாம் எங்கிருந்து வருகிறது? எல்லாம் பாகிஸ்தானில் இருந்து தான் வருகிறது. சித்துவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ராணுவ தளபதி பஜ்வா போன்றோரெல்லாம் நெருக்கமானவர்கள் மற்றும் பஞ்சாப் பாகிஸ்தானுடன் 600 கிமீ எல்லையை பகிர்கிறது என்கிறபோது இது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமானது” என கேப்டன் அமரிந்தர் சிங் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: