கொரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய அரசிடம் சரியான திட்டமிடல் இல்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் காணொலி காட்சி மூலம் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு எடுத்து வருவதாக விமர்சித்தார். கொரோனா தடுப்புப் பணியில் மத்திய அரசிடம் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் அரசு எடுக்கும் நடவடிக்கைகளை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், சிறுதொழில் நிறுவனங்களுக்கு தற்போதைக்கு பணம் தேவை என்றும் ஏழைகளுக்கு மத்திய அரசு குறைந்தபட்சம் 7,500 வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மே 17ஆம் தேதிக்கு பிறகு பொது முடக்கத்திலிருந்து மீள சரியான உத்தி தேவை என ராகுல் காந்தி கூறினார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.