அமேதி மக்கள் அனைவரும் என் குடும்பம்: ராகுல் உருக்கமான கடிதம்!

காங்கிரஸ் கட்சி விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், சிறுவணிகர்களுக்காக பாடுபட்டு வருவதாகவும், அதேசமயம் பாஜகவினர் நாட்டில் உள்ள 15-20 தொழிலதிபர்களுக்காக மட்டுமே செயல்பட்டு வருவதாகவும் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

அமேதி மக்கள் அனைவரும் என் குடும்பம்: ராகுல் உருக்கமான கடிதம்!
ராகுல் காந்தி
  • News18
  • Last Updated: May 3, 2019, 5:51 PM IST
  • Share this:
வாக்காளர்களை கவருவதற்காக பாஜகவினர் பொய் மூட்டைகளையும், பணத்தையும் வாரி இறைப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டியிடும் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் வரும் 6-ம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில், தொகுதி மக்களுக்காக அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், அமேதி தொகுதி மக்கள் அனைவரும் தனது குடும்பம் என்றும், வரும் தேர்தலில் பெருவாரியாக வந்து வாக்களித்து தன்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்ததும், பாஜக அரசால் தடைபட்டுள்ள வளர்ச்சித் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என உறுதியளித்துள்ளார்.

பாஜகவினர் பொய் மூட்டைகளையும், பணத்தையும் வாரி இறைத்தாலும், நேர்மையும், எளிமையுமே அமேதி மக்களின் வலிமை என்றும் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.

அமேதி மக்கள் அளித்த தைரியத்தால் தான் உண்மையை பின்பற்றி நடப்பதாகவும், ஏழை மக்களின் வலியை உணர்ந்து அவர்களுக்காக குரல் கொடுப்பேன் என்றும் கூறியுள்ளார்.மேலும், காங்கிரஸ் கட்சி விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், சிறுவணிகர்களுக்காக பாடுபட்டு வருவதாகவும், அதேசமயம் பாஜகவினர் நாட்டில் உள்ள 15-20 தொழிலதிபர்களுக்காக மட்டுமே செயல்பட்டு வருவதாகவும் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

Also see...

First published: May 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading