ஹோம் /நியூஸ் /இந்தியா /

காங்கிரஸ் கட்சி 136-வது தொடக்க நாள் விழா: பங்கேற்காமல் இத்தாலி சென்ற ராகுல் காந்தி - பா.ஜ.க விமர்சனம்

காங்கிரஸ் கட்சி 136-வது தொடக்க நாள் விழா: பங்கேற்காமல் இத்தாலி சென்ற ராகுல் காந்தி - பா.ஜ.க விமர்சனம்

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் ஆண்டு விழாவில் பங்கேற்காமல் ராகுல் காந்தி இத்தாலி நாட்டுக்குச் சென்றது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

காங்கிரஸ் கட்சி 1885-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி தொடங்கப்பட்டது. அதனை நினைவு கூரும் வகையில் 136-வது காங்கிரஸ் கட்சி தொடக்க நாள் விழாவை அக்கட்சியினர் இன்று கொண்டாடுகின்றனர். காங்கிரஸ் கட்சியின் 136-வது தொடக்க நாள் விழாவை முன்னிட்டு அக்கட்சியின் மூத்த ஏ.கே.அந்தோனி கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்வில் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். சோனியா காந்தியும் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை. முன்னதாக, காங்கிரஸ் கட்சி ஆண்டு விழா கொண்டாடவுள்ள நிலையில் ராகுல் காந்தி இத்தாலி புறப்பட்டுச் சென்றார். இது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தியின் இத்தாலி பயணம் குறித்து பா.ஜ.கவினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர்.

இதுதொடர்பாக பேசிய மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகான், ‘காங்கிரஸ் கட்சி 136-வது ஆண்டு விழாவை இங்கே கொண்டாடுகிறது. ராகுல் காந்தி இங்கே இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். ராகுல் காந்தி இத்தாலி சென்றது தொடர்பான கேள்விக்கு பதிலளிக்க அவரது சகோதரி பிரியங்கா காந்தி மறுத்துவிட்டார்.

இதுகுறித்து தெரிவித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, ‘சொந்த விவகாரத்துக்கு ராகுல் காந்தி வெளிநாடு சென்றுள்ளார். ஒரு சில நாள்களில் நாடு திரும்புவார்’ என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித், ‘ராகுல் காந்தி வராததற்கு 101 காரணங்கள் இருக்கும். நாம் எதையும் யூகிக்க வேண்டாம். அவர், வெளிநாடு சென்றிருக்கிறார் என்றால் முக்கிய காரணம் இருக்கும்’ என்று தெரிவித்தார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Congress, RahulGandhi