• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ‘பிரதமர் மோடி படிக்காதவர்.. ராகுல் போதை பழக்கத்துக்கு அடிமையானவர்’ - கர்நாடகாவில் காங்கிரஸ் vs பாஜக!

‘பிரதமர் மோடி படிக்காதவர்.. ராகுல் போதை பழக்கத்துக்கு அடிமையானவர்’ - கர்நாடகாவில் காங்கிரஸ் vs பாஜக!

Modi - Rahul

Modi - Rahul

காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ சமூகவலைத்தள பக்கத்தில் பிரதமர் மோடியை விமர்சித்து வெளியான ட்வீட் ஒன்று சர்ச்சையை கிளப்பியதுடன் காங்கிரஸ் - பாஜக மோதலை தொடங்கி வைத்தது.

  • Share this:
பிரதமர் மோடி படிக்காதவர் என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர் என்றும் போதைப் பொருள் விற்பவர் என்றும் கர்நாடக மாநில பாஜக தலைவர் பதிலடி தந்துள்ளார்.

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் மனுகுளி மற்றும் பாஜகவைச் சேர்ந்த உதசி ஆகிய எம்.எல்.ஏக்களின் மறைவு காரணமாக சிந்தகி மற்றும் ஹங்கல் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 30ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த இடைத்தேர்தலால் கர்நாடக அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ சமூகவலைத்தள பக்கத்தில் பிரதமர் மோடியை விமர்சித்து வெளியான ட்வீட் ஒன்று சர்ச்சையை கிளப்பியதுடன் காங்கிரஸ் - பாஜக மோதலை தொடங்கி வைத்தது.

படிக்காதவர் மோடி:

காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கன்னட மொழியில் வெளியான அந்த ட்வீட்டில் பிரதமர் மோடி படிக்காதவர் என்று வர்ணிக்கப்பட்டிருந்தது. அதன்படி, “காங்கிரஸ் கட்சி பள்ளிக்கூடங்களை கட்டியது, ஆனால் மோடி எப்போதும் படிக்க விரும்பவில்லை. மூத்தவர்கள் கல்வி கற்கவும் காங்கிரஸ் கட்சி திட்டங்கள் கொண்டு வந்தது, மோடி அங்கேயும் சென்று படிக்கவில்லை. பிச்சை எடுப்பது தடை செய்யப்பட்ட ஒன்று என்ற போதிலும், சோம்பேறிகள் நம் நாட்டு மக்களை பிச்சைக்காரர்களாக மாற்றிவிட்டனர். இந்த நாடு துன்பத்தில் இருக்கிறதென்றால் அது படிக்காத மோடியினால் தான்” என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Also read: பிரதமர் மோடியை ஜேம்ஸ் பாண்டுடன் ஒப்பிட்ட திரிணாமுல் எம்.பி!

தலைவர்களின் ரீயாக்‌ஷன்:

இந்த ட்வீட் வெளியான நிலையில் பாஜக தலைவர்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். பாஜக செய்தித்தொடர்பாளர் மாளவிகா அவினாஷ், காங்கிரஸ் கட்சியால் மட்டுமெ இவ்வளவு கீழ்த்தனமாக நடந்துகொள்ள முடியும் என்றார்.

இதுகுறித்து பேசிய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் லாவன்யா பல்லல், இந்த ட்வீட்டின் சொல்லாடல் துரதிர்ஷ்டவசமானது. இது தொடர்பாக ட்வீட்டை வெளியிட்ட சம்பந்தப்பட்டவரிடம் விசாரிக்கப்படும். ஆனால் இதற்காக மன்னிப்பு கோர முடியாது என்றார்.அதே நேரத்தில் காங்கிரஸ் மாநில தலைவரான டி.கே.சிவக்குமார் ட்விட்டரில் வெளியிட்டிருந்த பதிவில், “நான் என்றுமே நாகரிகமான பேச்சு மற்றும் ஒழுக்கம் அரசியலுக்கு தேவை என நம்புபவன். காங்கிரஸ் சோசியல் மீடியா பிரிவினரால் வெளியிடப்பட்ட தவறான ட்வீட்டுக்காக வருந்துகிறேன். அது நீக்கப்படும்” என்றார். பின்னர் அந்த பதிவை காங்கிரஸ் கட்சி நீக்கியது.

ராகுல் போதைக்கு அடிமை:

அத்துடன் இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது என கருதிய நிலையில், கர்நாடக மாநில பாஜக தலைவர் நலின் குமார் கதீல் இன்று செய்தியாளர்களிடையே பேசும்போது, “யார் அந்த ராகுல் காந்தி?  அவர் ஒரு போதைப் பொருள் விற்பனை செய்பவர், போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர். நான் இதை சொல்லவில்லை. இது செய்திகளில் வெளியாகி இருப்பது தான். உங்களால் கட்சியை கூட ஒழுங்காக நடத்த முடியவில்லை” என அவர் பேசியது அடுத்த கட்ட பிரச்னைக்கு வழிவகுத்திருக்கிறது.

Congress vs BJP


பாஜக மன்னிப்பு கேட்கட்டும்:நலின் குமார் கதீலின் பேச்சையடுத்து , காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் வெளியிட்டுள்ள பதிவில், “நான் ஏற்கனவே கூறியது போல ஒழுக்கமும், மரியாதையும் அரசியலுக்கு முக்கியம் என நம்புபவன். அது எதிரிகள் என்றாலும் சரிதான். நான் சொல்லுவதை பாஜக ஏற்றுக்கொள்ளும் என நம்புகிறேன்.  ராகுல் குறித்து விரும்பத்தகாத வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்ததற்காக பாஜக மாநில தலைவர் தனது பேசுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: