பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் திட்டம் இல்லாத மோடி அரசு! 100 ஆட்சி குறித்து ராகுல் காந்தி காட்டம்

news18
Updated: September 8, 2019, 6:49 PM IST
பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் திட்டம் இல்லாத மோடி அரசு! 100 ஆட்சி குறித்து ராகுல் காந்தி காட்டம்
ராகுல் காந்தி
news18
Updated: September 8, 2019, 6:49 PM IST
சூறையாடப்பட்டிருக்கும் நம்முடைய பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வழிகாட்டுதல்களும் திட்டங்களும் இல்லாத அரசாக மோடியின் நூறு நாள் ஆட்சி உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

மோடி தலைமையில் பா.ஜ.க அரசு மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சியமைத்து 100 நாள்கள் நிறைவடைந்துள்ளது. மோடி தலைமையிலான நூறு நாள்கள் ஆட்சி குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.Loading...

இதுகுறித்த அவருடைய ட்விட்டர் பதிவில், ‘நூறு நாள்களில் எந்த வளர்ச்சியும் இல்லாத, ஜனநாயகத்தைத் தொடர்ச்சியாக அழிக்கும், ஊடகங்களின் விமர்சனங்களை மூழ்கச் செய்யும் வகையில் குரல் வளையை நெறிப்பது, உறுதியான தலைமை இல்லாமல், சூறையாடப்பட்ட நமது பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வழிகாட்டுதலும், திட்டங்களும் இல்லாத மோடி அரசுக்கு வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Also see:

First published: September 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...