Home /News /national /

காங்கிரஸ் கட்சியை ராகுலும், பிரியங்காவுமே தோற்கடித்து விடுவார்கள்... உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேச்சு

காங்கிரஸ் கட்சியை ராகுலும், பிரியங்காவுமே தோற்கடித்து விடுவார்கள்... உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேச்சு

Yogi Adityanath: உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக நடைபெறும் வாக்குப்பதிவு கடந்த 10-ம்தேதி தொடங்கியது. இன்று 55 தொகுதிகளில் இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    காங்கிரஸ் கட்சியை ராகுலும், பிரியங்காவுமே தோற்கடித்து விடுவார்கள் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

    உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், பஞ்சாப், கோவா மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. இதில் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.

    உத்தரப்பிரதேசத்தில் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியே களத்தில் நிற்பதால் மீண்டும் பாஜக ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பு காணப்படுகிறது.

    இந்நிலையில் தேர்தல் பிரசாரம் குறித்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

    இதையும் படிங்க - உ.பி.யில் 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்

    காங்கிரஸ் கட்சியை தோற்கடிப்பதற்கு வெளியில் இருந்து யாரும் வேலை பார்க்க வேண்டாம். ராகுலும், பிரியங்காவுமே அந்த வேலையை பார்த்துக் கொள்வார்கள். மக்களை வதைக்கும் காங்கிரஸ் கட்சியை தேர்ந்தெடுக்க வேண்டாம் என்று வாக்காளர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.

    உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜக தொடர்ந்து 2வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். கடந்த முறை வெற்றி பெற்ற இடங்களை விடவும் இந்த முறை கூடுதல் இடங்களில் நாங்கள் வெற்றி பெறுவோம்.

    இதையும் படிங்க - சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியதற்கான ஆதாரங்கள் எங்கே?- தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்

    இவ்வாறு அவர் தெரிவித்தார். உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக நடைபெறும் வாக்குப்பதிவு கடந்த 10-ம்தேதி தொடங்கியது. இன்று 55 தொகுதிகளில் இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    5 முறை மக்களவை தொகுதி எம்.பியாக இருந்த யோகி ஆதித்யநாத், கடந்த முறை நடந்த உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். அவர் உத்தராகண்ட் மாநிலத்திலும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Musthak
    First published:

    Tags: Priyanka gandhi, Rahul gandhi, Uttar pradesh, Yogi adityanath

    அடுத்த செய்தி