இந்தியாவின் முக்கியமான நிறுவனமான ரிசர்வ் வங்கியை, அதன் முக்கியத்துவத்த உணர்ந்து பாதுகாக்க வேண்டும் என்றும், மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்குமிடையிலான பிணக்கை மேலும் வளரவிடக் கூடாது என்றும் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.
மத்திய அரசின் அனைத்து கருத்துகளையும் சரி என ரிசர்வ் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு என்றும், அது இந்தியாவின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு ஆபத்து என்றும் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.
ரிசர்வ் வங்கிக்கும் மத்திய நிதியமைச்சகத்துக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக பேட்டியளித்த ரகுராம் ராஜன், இந்தியாவின் முக்கியமான நிறுவனமான ரிசர்வ் வங்கியை, அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து பாதுகாக்க வேண்டும் என்றும், மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையிலான பிணக்கை மேலும் வளரவிடக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ரிசர்வ் வங்கிக்கு ஆளுநர் மற்றும் துணை ஆளுநர்கள் நியமிக்கப்பட்ட பிறகு, அவர்களுடைய கருத்துக்கு செவிமடுக்க வேண்டும் என்று கூறியுள்ள ரகுராம் ராஜன், ரிசர்வ் வங்கி என்பது சீட் பெல்ட் போன்றது என்றும், ஓட்டுநராகிய மத்திய அரசு சீட்பெல்ட்டை அணியாவிட்டால் விபத்தில் சிக்க நேரிடும் என்றும் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் எச்சரித்துள்ளார்.
சில விவகாரங்களில் மத்திய அரசின் கருத்துகளுக்கு மறுப்பு தெரிவிக்க ரிசர்வ் வங்கிக்கு உரிமை உள்ளது என்று கூறியுள்ள ரகுராம்ராஜன், ரிசர்வ் வங்கியின் கருத்துகளை மீறி செயல்படுவது பொருளாதார வளர்ச்சிக்கு நல்லதல்ல என்றும் கூறியுள்ளார்
மற்ற நாடுகளோடு ஒப்பிடும் போது இந்தியாவின் பணவீக்கம் நல்ல நிலையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ள ரகுராம் ராஜன், இதற்காக அரசும் ரிசர்வ் வங்கியும் பாராட்டப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் பரஸ்பர பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளை தீர்க்க முன்வர வேண்டும் என்றும் ரகுராம் ராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.