ஜிடிபி சரிவு அனைவரையும் விழிப்படையச் செய்யவேண்டும் - முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்
ஜிடிபி சரிவு அனைவரையும் விழிப்படையச் செய்யவேண்டும் - முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்
ரகுராம் ராஜன்
விலையில்லா தானியங்கள் அளிப்பது முதல் வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்துவது வரையிலான செயல்பாடுகள் மிகவும் அங்குமிங்குமானதாக பொதுவற்ற நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ள்ளார்.
ஜிடிபி விகித சரிவு மத்திய அரசுக்கு பயம் அளித்திருக்க வேண்டும். பொருந்தாத இணக்கம் மத்திய அரசை உடனடியாக செயல்பட வைத்து பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சிகளில் ஈடுபட வைக்க வேண்டும் என முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
2020-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டில் நிகழ்ந்திருக்கும் 23.9% விகிதக் குறைவு, அனைவரையும் விழிப்படையச் செய்ய வேண்டும். மத்திய அரசு இந்த இணக்கமில்லா நிலையை ஒப்புக்கொள்வதுடன் அதை சரிசெய்ய முயல வேண்டும்.
கொரோனா பரவல் காரணமாக கடும் பொருளாதார சரிவைச் சந்தித்த வளர்ந்த நாடுகளான அமெரிக்கா மற்றும் இத்தாலியை விட, இந்தியப் பொருளாதாரம் மோசமான நிலையில் இருக்கிறது என லிங்கெடின் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார் ரகுராம் ராஜன்.
கொரோனா தொடர்பான நிவாரண செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் அவர், விலையில்லா தானியங்கள் அளிப்பது முதல் வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்துவது வரையிலான செயல்பாடுகள் மிகவும் அங்குமிங்குமானதாக பொதுவற்ற நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ள்ளார்.
Published by:Gunavathy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.