#Rafale வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

Rafale Deal Controversy | பிரான்ஸைச் சேர்ந்த டசால்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ, தங்களது பார்ட்னராக ரிலையன்ஸை தேர்வு செய்ததில் இந்திய அரசின் நிர்பந்தம் எதுவும் இல்லை என்று சமீபத்தில் கூறியிருந்தார்.

#Rafale வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
உச்சநீதிமன்றம்
  • News18
  • Last Updated: November 14, 2018, 3:29 PM IST
  • Share this:
ரபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரிய மனு மீதான விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. 

பிரான்ஸைச் சேர்ந்த டசால்ட் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ஆனால், இதில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

ரபேல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரியும், நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.


Rafale deal
கோப்புப் படம்


தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் இது விசாரணைக்கு வந்தபோது, ஒப்பந்தம் குறித்த ஆவணங்களை, மூடி முத்திரையிட்ட உறையில் மத்திய அரசு தாக்கல் செய்தது. அதில், கடந்த 2013-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட விதிகளின் அடிப்படையிலேயே போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த ஆவணங்கள் மனுதாரர்களிடம் அளிக்கப்பட்ட நிலையில், இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு, பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்து யாரும் வரத்தேவையில்லை, விமானப்படையில் இருந்து அதிகாரி யாரேனும் இன்றே ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

நீதிமன்றத்தின் உத்தரை ஏற்று 2 விமானப்படை அதிகாரிகள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

Also See..

First published: November 14, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading