காங்கிரஸ் தலைவர் ராகுல் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

ரஃபேல் குறித்த ராகுலின் பேச்சு உச்சநீதிமன்ற தீர்ப்பை திரிப்பது போல் உள்ளதாகக் கூறி, பாஜக எம்பி மீனாக்ஷி லேகி உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.

Web Desk | news18
Updated: April 13, 2019, 8:30 AM IST
காங்கிரஸ் தலைவர் ராகுல் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!
ராகுல் காந்தி. (PTI Photo)
Web Desk | news18
Updated: April 13, 2019, 8:30 AM IST
ரஃபேல் விமான ஊழல் புகாரில் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்ததற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ரஃபேல் விமான கொள்முதல் தொடர்பாக வெளியான ரகசிய ஆவணங்களின் அடிப்படையில் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று அண்மையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை சுட்டிக்காட்டிய ராகுல், காவலாளியே திருடன் என்பதை உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறினார்.

மேலும், ரபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் முன்னர் தன்னை குற்றமற்றவர் என மோடி  கூறிவிட்டதாக சொல்லிக்கொண்டிருக்கிறார். புதிய ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடத்த சம்மதித்தன் மூலம் நாட்டின் காவலாளியான பிரதமர் மோடி திருடன் என உச்சநீதிமன்றம் கருதுகிறது என்னும் பொருள்படும் வகையிலும் ராகுல் கூறினார்.

மீனாக்ஷி லேகி


ராகுலின் இந்த பேச்சு உச்சநீதிமன்ற தீர்ப்பை திரிப்பது போல் உள்ளதாகக் கூறி, பாஜக-வை சேர்ந்த மீனாக்ஷி லேகி உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார். இம்மனுவை திங்கட்கிழமை விசாரிப்பதாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு கூறியுள்ளது.

Also see... பிரசார மேடை: பிரசாரத்திற்கு பின் குப்பையை அகற்றிய பாமக தொண்டர்கள்


Also see... சிலை கடத்தல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த 


Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...