’ரஃபேல் ஆவணங்கள் திருடு போய்விட்டன...’- உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

ஆங்கில ‘தி இந்து’ பத்திரிகை ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக ஆவணம் வெளியிட்டதையும் அரசு வழக்கறிஞர் கண்டித்து வாதிட்டார்.

’ரஃபேல் ஆவணங்கள் திருடு போய்விட்டன...’- உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்
Illustration by Mir Suhail/News18.com
  • News18
  • Last Updated: March 6, 2019, 4:55 PM IST
  • Share this:
”ரஃபேல் ஆவணங்கள் பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து திருடு போயுள்ளது. மேலும், அந்த ஆவணங்கள் வெளியிடப்பட்டால் அது நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் என்பதால் சமர்ப்பிக்க முடியாது” என உச்ச நீதிமன்றத்தில் அரசு வாதம் செய்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் ரஃபேல் தீர்ப்பு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் அர்சு சார்பில் வழக்கறிஞர் வேணுகோபால் ஆஜரானார்.

ஆங்கில ‘தி இந்து’ பத்திரிகை ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக வெளியிட்ட ஆவணத்தை வெளியிட்டதையும் அரசு வழக்கறிஞர் கண்டித்து வாதிட்டார்.


அவர் வாதத்தில், “இதுபோன்ற ஆவணங்களை வெளியிடுவது ஏற்புடையதல்ல. இதை வைத்திருப்பதும் அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தின் கீழ் குற்றமாகும்” எனக் குறிப்பிட்டார். ஆனால், அரசுக்கு எதிரான வாதத்தில் ரஃபேல் ஆவணம் சமர்ப்பிக்கும் விஷயத்தில் அரசு தரப்பு பொய் சொல்லியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

ரஃபேல் ஆவணத்தை வெளியிட்டது தொடர்பாக ’தி இந்து’ என். ராம் அளித்த எழுத்துப்பூர்வமான விளக்கத்தை இந்த சூழ்நிலையில் ஏற்றக்கொள்ள முடியாது என உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

திருடப்பட்ட ஆவணமாக இருந்தாலும் அது நீதிமன்றத்தில் ஆதாரமாக கருதலாம் என்று நீதிபதி ஜோசப் குறிப்பிட்டார்.மேலும் பார்க்க: விஜயகாந்த் - ஓ.பி.எஸ் சந்திப்பின் பின்னணி என்ன?
First published: March 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading