ரஃபேல் ஆவணங்கள் திருடு போகவில்லை: தலைமை வழக்கறிஞர் விளக்கம்

ரஃபேல் ஆவணங்கள் திருடு போகவில்லை: தலைமை வழக்கறிஞர் விளக்கம்
கே.கே.வேணுகோபால்
  • Share this:
ரஃபேல் விமான ஒப்பந்த ஆவணங்கள் திருடப்படவில்லை, அவை நகல் எடுக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கூறியுள்ளார்.

ரஃபேல் விமான ஒப்பந்தம் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறுசீராய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை புதன்கிழமை அன்று உச்சநீதிமன்றத்தில் நடந்தது. அப்போது வாதிட்ட தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், பாதுகாப்புத்துறையின் ரகசிய ஆவணங்களை திருடி, அதன் அடிப்படையிலேயே வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.

ஆவணங்களைக்கூட காக்கத் தெரியாத அரசு நாட்டை எவ்வாறு காக்குமென எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்த விவகாரம் தொடர்பாக, மத்தியில் ஆளும் பாஜக அரசை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.


இந்த விவகாரம் தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், ‘‘ரஃபேல் விமான ஒப்பந்தம் குறித்த ஆவணங்கள் திருடப்படவில்லை. ஆவணங்களை திருட்டுத் தனமாக நகல் எடுத்து, அதன் மூலம் வழக்கு தொடர்ந்துள்ளது. வழக்கில் வாதத்திற்கு வலு சேர்க்கவே திருட்டு என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது’’ என்று கூறினார்.
First published: March 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading