ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் தலையீடு!

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சக ஆலோசகருடன் பிரதமர் அலுவலக இணை செயலாளர் தொலைபேசி மூலம் பேசியதாக, பிரான்ஸ் பேச்சுவார்த்தை குழுவின் தலைவர் மூலம் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் தலையீடு!
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: February 8, 2019, 1:08 PM IST
  • Share this:
ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகத்துக்கு தெரியாமலேயே பிரான்ஸ் அரசுடன் பிரதமர் அலுவலகம் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது அம்பலமாகியுள்ளது. 

பிரான்ஸிடமிருந்து ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சகத்துக்கு தெரியாமலேயே பிரான்ஸ் அரசுடன் பிரதமர் அலுவலகம் தனியாக பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது அம்பலமாகியுள்ளது.


இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கருக்கு கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் 24-ம் தேதி அப்போதைய பாதுகாப்புத் துறை செயலாளர் மோகன்குமார் குறிப்பு அனுப்பியுள்ளார்.

அதில், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சக ஆலோசகருடன் பிரதமர் அலுவலக இணை செயலாளர் தொலைபேசி மூலம் பேசியதாக, பிரான்ஸ் பேச்சுவார்த்தை குழுவின் தலைவர் மூலம் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சர் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், நமது பேச்சுவார்த்தையின் நிலைப்பாட்டை பாதிக்கும் வகையிலான தலையீட்டை பிரதமர் அலுவலகம் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.மேலும், பேச்சுவார்த்தையின் முடிவில் திருப்தி ஏற்படவில்லை என்றால், அதில் தேவையான மாற்றங்களை உரிய அளவில் பிரதமர் அலுவலகம் மேற்கொள்ளலாம் என்று பாதுகாப்புத் துறை செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

Also see...

First published: February 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்